Saturday, March 14, 2020

பிரசாந்த் கிஷோர் கைக்கு தி.மு.க., மாறுகிறது? அனைத்து விபரங்களை ஒப்படைக்க உத்தரவாம்!

அரசியல் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட, பிரசாந்த் கிஷோர் கைக்கு, தி.மு.க.,வின் முழு அதிகாரமும் மாறி வருகிறதோ என்ற சந்தேகம், அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. அன்பழகன் மறைவுக்கு பின், காலியாகி உள்ள, பொதுச்செயலர் பதவிக்கு, தகுதியான நபரை தேர்வு செய்யும் பொறுப்பு, பிரசாந்த் கிஷோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது தான், அதற்கு காரணம். இப்பதவிக்கு தகுதியானவர் பற்றிய, அனைத்து விபரங்களையும் திரட்டி, தன்னிடம் ஒப்பிக்கும்படி, ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில், ஒன்பது ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சி பொறுப்பில் இல்லை. எனவே, 2021 சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின், முதல்வர் கனவு நிறைவேறும்.இல்லையெனில், அது, கனவாகவே முடிந்து விடும்.

கருத்துக்கணிப்பு

எனவே, வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, அரசியல் வியூகங்கள் அமைக்கவும், ஆலோசனைகள் வழங்கவும், பிரபல அரசியல் ஆலோசகர், பிரசாந்த் கிஷோருடன், தி.மு.க., தலைமை ஒப்பந்தம் செய்துள்ளது. அவரும், தி.மு.க.,விற்கான அரசியல் பணிகளை துவக்கி உள்ளார். முதல் கட்டமாக, சமூக வலைதளங்களில், தி.மு.க., மற்றும் ஸ்டாலினுக்கு எதிராக வெளியிடப்பட்ட, 'வீடியோ, மீம்ஸ், கார்ட்டூன்' போன்ற வற்றை, அகற்ற நடவடிக்கை எடுத்தார். அடுத்து, பொது மக்களிடம் அரசியல் கணக்கெடுப்பு என்ற பெயரில், ஸ்டாலின் செல்வாக்கு குறித்து, தொலைபேசியில் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறார்.

'கடந்த தேர்தலில், எந்த கட்சிக்கு ஓட்டளித்தீர்கள்; வரும் தேர்தலில், யாருக்கு ஓட்டளிப்பீர்கள்; ஸ்டாலினிடம் உங்களுக்கு பிடித்த குணம் என்ன; அவர் தன்னை வளர்த்துக் கொள்ள செய்ய வேண்டியது என்ன' என்பது போன்ற கேள்விகளை கேட்டு, பொது மக்களிடம் பதில் பெறுகின்றனர். இது ஒருபுறமிருக்க, கட்சியின் செயல்பாடுகளை தீர்மானிப்பவராகவும், பிரசாந்த் கிஷோர் வேகமாக உயர்ந்துள்ளார். முட்டி மோதுகின்றனர் சமீபத்தில், தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த, ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன், பிரசாந்த் கிஷோர் வந்து சென்றார். அவரை, தி.மு.க., நிர்வாகிகள் பிரமிப்போடு பார்த்து, வணக்கம் செலுத்தினர்.
பிரசாந்த் கிஷோர் கைக்கு தி.மு.க., மாறுகிறது? அனைத்து விபரங்களை ஒப்படைக்க உத்தரவாம்!

தற்போது, புதிய பொதுச்செயலரை தேர்வு செய்யும் பொறுப்பும், அவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இப்பதவிக்கு, துரைமுருகன், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு என, பலர் முட்டி மோதுகின்றனர். இதில், துரைமுருகனுக்கு பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டால், அவர் வகித்து வரும் பொருளாளர் பதவி யாருக்கு என்ற, போட்டி ஏற்படும். எனவே, பொருளாளர் பதவியை பெற, முன்னாள் அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ராஜா, பொன்முடி போன்றோர் காய் நகர்த்தி வருகின்றனர். மகளிர் அணி செயலராக உள்ள கனிமொழிக்கு, பொருளாளர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, கட்சியில் மட்டுமின்றி, குடும்பத்திலும் எழுந்துள்ளது.

தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அமைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான, ஏ.ஜி.ரவி, சமூக வலைதளங்களில், 'இவர் தான் பொதுச்செயலர்; இவர் தான் பொருளாளர் என்று, பரவலாக பேசப்படுகின்றன. 'என் தனிப்பட்ட கருத்து, கட்சிக்காக, பெண்ணுரிமைக்காக போராடும் கனிமொழியை, பொருளாளராக நியமித்தால், ஸ்டாலினுக்கு பக்கபலமாக செயல்படுவார்' என, கூறியுள்ளார். பொதுச் செயலர் மற்றும் பொருளாளர் பதவிக்கு, போட்டி கடுமையாக இருப்பதால், யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து, மாவட்ட வாரியாக கட்சியினரிடம், 'சர்வே' எடுக்கும் பொறுப்பை, பிரசாந்த் கிஷோர் குழுவிடம், கட்சி தலைமை வழங்கியுள்ளது.

ஓங்கிவிட்டதா?

சர்வேயில் கிடைக்கும் அனைத்து விபரங்களையும் ஒப்பிக்கவும், கட்சி தலைமை உத்தரவிட்டு உள்ளது. 'கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளை நியமிப்பதிலும், தன் ஆலோசனை பெற வேண்டும்' என, பிரசாந்த் கிஷோர் விரும்புவதால், அவரிடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டனர். அவரது குழுவினரும், கட்சியினரிடம் கருத்து கேட்கும் பணியை துவக்கி உள்ளனர். இதனால், பொதுச்செயலர், பொருளாளரை நியமிக்கும் அளவுக்கு, பிரசாந்த் கிஷோர் கை ஓங்கி விட்டதா; ஒட்டுமொத்த கட்சியும், அவர் கைக்கு போய் விட்டதா என, தி.மு.க.,வினர் குமுறுகின்றனர்.
பொதுச்செயலர் மற்றும் பொருளாளர் பதவிக்கு, போட்டி கடுமையாக இருப்பதால், யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து, மாவட்ட வாரியாக கட்சியினரிடம், 'சர்வே' எடுக்கும் பொறுப்பை, பிரசாந்த் கிஷோர் குழுவிடம், கட்சி தலைமை வழங்கியுள்ளது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...