Thursday, March 5, 2020

ரௌடி பேபி ஜோதிமணி.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் ஜோதிமணி மீது நடவடிக்கை? கரூர் தொகுதி மக்கள் உற்சாகம் !
முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம் பி ஜோதிமணியின் செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, பாஜகவை சேர்ந்த எம் பி சங்கீதா தேவ் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவரை கீழே தள்ளியதாகவும் ஜோதிமணி மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் டில்லியில் நடைபெற்ற கலவரம் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன, நேற்றைய தினமும் போராட்டம் தொடர்ந்தன, இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம் பி கள் ஆளும் கட்சி எம் பி களின் இடங்களுக்கு சென்று கோஷம் போட முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி மற்றும் ரம்யா ஆகிய இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம் பி சங்கீதா தேவ் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் தனது கை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு அவர் எழுதிய கடிதத்தில் நான் பல ஆண்டுகளாக மக்களவையில் பங்கேற்று வருகிறேன், இது போன்ற மோசமான செயலை நான் சந்தித்தது, இல்லை ஜோதிமணி, ரம்யா இருவரும் தன்னை தாக்கினர், தன்னை கீழே தள்ளிவிட முயன்றனர், இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல என்றும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிமணி முதல் முறையாக எம் பி யாக தேர்வான நிலையில் தொகுதி மக்கள் பிரச்னையை பேசுவார் என்று அனுப்பிவைத்தால் அங்கு ஒன்று தூங்குகிறார், இல்லை தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுகிறார், மக்களவை தலைவர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து எங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் என கரூர் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...