இன்று உலக பெண்கள் தினம்!
இறைவன் படைப்பினில் உன்னதமான படைப்பு பெண்கள் தான். இளமை முதல் முதுமை வரை குழந்தைகள்,சகோதரி, பெற்றோர், கணவர் என மற்றவர்களின் நலனிலேயே அக்கறையாய் இருப்பவள். சுயநலம் பார்க்காமலும், எவ்வித ஊதியமும் இல்லாமலும், காலம் நேரம்
பார்க்காமல் உழைப்பவள். குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் தன் தலையில்
தாங்குபவள்.
குழந்தை தொடங்கி சகோதரி, மனைவி, தாய் என பல பரிணாமங்களாக திகழ்கின்றனர்.
பெண்களின் முன்னேற்றத்தை பொறுத்தே நாட்டின் முன்னேற்றமும் அமைகிறது. சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெண்களுக்கு உரிய பங்களிப்பு வழங்க வலியுறுத்தி மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அக்காலத்தில் பெண்ணடிமை
மற்றும் பெண் சிசுக்கொலை அதிகமாக இருந்தது. இது போன்ற தடைகளை தகர்த்து, பல
சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் நினைத்த பல வேலைகளையும் இன்று பெண்கள் செய்து காட்டியுள்ளனர்.
படித்த மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகரித்துள்ளனர். குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு வேலைக்கு செல்பவர்கள் பாரட்டுக்குரியவர்கள்.

ஏன் மறுப்பு
பல துறைகளில் பெண்கள் சாதித்திருந்தாலும், அரசியலில் அவர்களுக்கான சம வாய்ப்பு
மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற நீண்டகால கோரிக்கை நிறைவேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். கல்வி, வேலை
வாய்ப்பிலும் சலுகைகள் வழங்க வேண்டும். நிறுவனங்களில் ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். மனதில் மாற்றம் பெண்களை கடவுளாக பார்க்கும் நம் நாட்டில், பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்கொடுமைகள் இன்றும் தொடர்வது பெரும் குற்றம். சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது மன்னிக்கமுடியாத செயல். வரதட்சணை, பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, சிசுக்கொலை போன்ற பிரச்னைகள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டியவை.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்டம் ஏட்டளவில் இல்லாமல் கண்டிப்புடன்
நிறைவேற்றப்பட வேண்டும். தன் சகோதரியை பல மற்ற பெண்களையும் எண்ணினால்,
குற்றங்களுக்கு வாய்ப்பில்லை. பெண்ணின் தியாகத்தை போற்றுவோம். அவர்களது
உரிமைக்கு தோள்கொடுப்போம்.
13
கல்வி கற்ற தாய்மார்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது இரட்டிப்பாகிறது. 13 கோடி பெண் குழந்தைகள், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.
75
உலகில் 75 கோடி பெண்கள் 18 வயது பூர்த்தியாகும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படு
கின்றனர். 117 நாடுகளில் பெண் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு உரிய சட்டங்கள் இல்லை
No comments:
Post a Comment