Sunday, June 21, 2020

வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்....!


வெண்டைக்காய்களை எடுத்து நன்றாக கழுவி அதன் தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்டி விடுங்கள். பின்னர் அதனை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற வேண்டும். குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பதால் முந்தைய நாள் இரவு ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம். இந்த நீர் எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டிருக்கிறது.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் மிகச் சிறந்த பலன்களை தரும். இந்த நீரை குடிப்பதனால் ரத்த சோகை கட்டுப்படும். எலும்புகளை வலுவாக்க இந்த வெண்டைக்காய் சாறு தினமும் பருகலாம்.
வெண்டைக்காயில் நிறைய இன்ஸுலின் இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதோடு வெண்டைக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதனால் இந்த நீரை தொடர்ந்து எடுத்து வர சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
நீர் சத்தினை சரிகட்டவும், வயிற்றுப்போக்கினை நிறுத்தவும் வெண்டைக்காய் சாறினை குடிக்கலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் உபாதைகள் இருந்தாலோ அல்லது காய்ச்சல், தலைவலி இருந்தாலோ மருத்துவரை சந்திப்பது மிகவும் அவசியமானதாகும்.
வெண்டைக்காயில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது. மேலும் அது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்திடும் அதோடு நம் இதயத்தையும் பாதுகாக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...