*சென்னை ஏதோ "கொரானா" நோயின் பிறப்பிடம் போலவும் நோய் பிடித்த சென்னை வாழ தகுதியற்ற நகரம் என பல தரப்பட்ட மக்கள் தகவல் பரப்பி வருகின்றனர் சிலர் சென்னை வாசிகளை கண்டாலே நோய் ஒட்டிக்கொள்வது போல சமூக வலைதளங்களில் "MEMES" வெளியிடுகின்றனர் அவர்களுக்கு மனசாட்டியும் மனிதாபிமானமும் இருக்கிறதா என தெரியவில்லை சொந்த ஊரில் வாழவே வழியில்லாமல் சென்னைக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர் அப்படி வந்தவர்களை அரவணைத்து கொண்டது இதோ இந்த சென்னை தான்!!!*
*சென்னையில் வாழ்வாதாரம் பெற்று எவ்வளவு சம்பாதித்து இருப்பீர்கள்... அந்த பணத்தில் தானே குடும்பம் நடத்தினர் பிள்ளைகளை படிக்க வைத்தனர் ஊரில் இருக்கும் பெற்றோரின் பசியை போக்கினீர்கள்...*
*எல்லாம் மறந்துவிட்டதா!!!*
*எல்லாம் மறந்துவிட்டதா!!!*
*சென்னை இன்று வாழ தகுதி இல்லாத நகரமாக மாறி விட்டதா உங்களுக்கு எவ்வளவு சுயநலம்??எங்க ஊர் பக்கம் வந்துடாதீங்க சென்னை மக்களே...எனக் கூறும் அதிமேதாவிகளே...நாங்களும் திருப்பி சொல்கிறோம் உங்கள் ஊரில் இருந்து யாரும் சென்னைக்கு வராதீர்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா உங்களால்!!!*
*சென்னையில் மக்கள் குறுகிய தெருக்களில் வாழ்கின்றனர் ஒரு வீட்டிற்குள் எட்டு பேர் வசிக்கின்றனர் அதனால் தான் நோய் பரவுகிறது என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.*
*அதுவே இப்போ தான் உங்களுக்கு தெரியுமா? அரசு உத்தரவுகளை மதிக்க நாங்கள் தயார்.*
*நீங்கள் சொன்னது போல வீட்டிற்கு எட்டு பேர் இருக்கிறோமே!!! எங்களுக்கு சாப்பாடு எப்படி சார் கிடைக்கும்??? நோயை கூட எதிர் கொள்ளலாம் பசியை பொறுத்துக்கொள்ள முடியாதே!!!சென்னை மக்களை நோய் பரப்பும் வைரஸ் என துாற்றாதீர் வாழ வழியின்றி வந்த உங்களை அரவணைத்து காப்பாற்றியது இந்த சென்னை தான் நீங்கள் எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம் நாங்களே மீண்டு எழுவோம்.*
*தேவையின்றி பேசுவதை மட்டும் நீங்கள் நிறுத்தினால் போதும் எத்தனையோ இடறுகளை சந்தித்தும் சென்னை மீண்டு வந்திருக்கிறது; இப்போதும் மீண்டு வரும்.*
*அதன் பின் நீங்கள் வாருங்கள் நாங்கள் அன்புடன் வரவேற்போம்.*
No comments:
Post a Comment