Tuesday, June 23, 2020

இந்திய பாதுகாப்பு அமைச்சர் செய்திருக்கும் அறிவிப்பு சீன தூக்கத்தை கெடுத்துவிட்டது.

ஆம், இப்பொழுது மாஸ்கோவில் இருக்கும் ராஜ்நாத் சிங்தான் கிளம்புவதற்கு முன் அதாவது இரு தினங்களுக்கு முன் தன் வீட்டில் நடந்த கூட்டத்தில்தான் இல்லா தினங்களில் ஏதும் சீனா தகறாறு செய்தால் உடனே அவசரநிலையினை அறிவித்து செய்ய வேண்டியதை செய்யும் முழு அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு சென்றார்
ஆம், இதன் பொருள் என்னவென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் யுத்தம் தொடங்கலாம், தொடங்கியவுடன் நாடு ராணுவத்தின் கையில் செல்லும்...
மாஸ்கோ சென்ற பின்னும் சும்மா இருக்கின்றாரா என்றால் இல்லை, இந்தியாவுக்கு சூ 57 எனும் ரஷ்யாவின் நவீன விமானத்தை கொருவதாக செய்திகள் வரும்படி பார்த்து கொள்கின்றார்
சூ 57 என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் வடிவம், மிக நவீனமானது
ஏதோ உறுமினால் அடங்குவார்கள், மெல்ல தட்டினால் அடங்குவார்கள் என வந்த சீனா, இந்தியாவின் நடவடிக்கை கண்டு அதிர்ந்து நிற்கின்றது
ஆம் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்ததில் இருந்தே லடாக்கில் பெரும் கட்டுமானங்களை செய்தது இந்தியா, கட்டுமானம் என்றால் பெரும் சாலைகளை அகலமாக அமைப்பது, சிறு விமான நிலையங்களை ஏற்படுத்துவது என ஏராளம்
சீனா இதை எதிர்பார்க்கவில்லை, ஆனால் இந்தியாவின் நோக்கம் அவர்கள் ராணுவ கண்களுக்கு புரிந்தது
இந்த கம்யூனிச அரசாங்கம் என சொல்லபடும் அரசுகள் உண்மையில் ராணுவ அரசுகளே. பலாத்காரமாக ஆட்சியினை கைபற்றிய அந்த கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் ஆயுதகாவலில் இருப்பார்கள், ஆயுத கண்களிலே பார்ப்பார்கள்
அப்படி இந்தியாவின் மகா வேகமான நகர்வு அவர்களுக்கு அச்சத்தை கொடுத்தது, இது தங்களின் மேற்கு எல்லைக்கான சவால் என்பதை உணர்ந்தார்கள். பாகிஸ்தானுடனான சப்ளை ரூட் மற்றும் திபத்தின் அதி முக்கிய சாலையினை நொடியில் பிடிக்க இந்தியா போடும் திட்டம் என்பது அவர்களுக்கு புரிந்தது
முதலில் மிரட்டினார்கள், பின் படைகுவித்தார்கள், இந்தியாவோ கொஞ்சமும் பின்வாங்காமல் கால்வான் பள்ளதாக்கின் எல்லையில் பாலம் கட்டி தயாராயிற்று, இனி கொஞ்சம் தாண்டினால் சீன பாகிஸ்தான் சாலையினை முடக்க முடியும்
அதாவது நான் நினைத்தால் எப்பொழுதும் இதில் கைவைக்கலாம் என்ற நிலைக்கு இந்தியா வந்தபின் சீனாவால் சும்மா இருக்கமுடியவில்லை
கடைசி மிரட்டலையும் செய்தது, அதிலும் இந்தியா பணியவில்லை மாறாக போருக்கு தயார் என இறங்கிவிட்டது
இந்தியாவின் பெரும் பலம் தற்போதைய அரசும் அதன் அணுகுமுறைகளும், பின்னணியில் இருப்பது அமெரிக்க ஆதரவும் ராணுவ கணக்கும்
சீனாவினை மிக நன்றாக கணக்கெடுத்து அவர்களின் பலவீனம் மற்றும் பலத்தை கையில் வைத்திருக்கும் நாடு அது, தன் கணக்குபடி சீன ராணுவம் எண்ணிக்கையில் அதிகமே தவிர தொழில்நுட்பத்தில் பலமானது அல்ல‌
இன்றும் தன் எல்லைக்கு வந்துவிட்ட அமெரிக்க கப்பலின் மேல் கூட சீன விமானங்கள் பறக்காது, அவ்வளவு பயம்
இப்படி ஏக கணக்குகளுடன் மிக தைரியமாக வந்து நின்று "வாடா...டேய்" என சவால்விடும் இந்தியாவினை கண்டு உண்மையில் பின் வாங்குகின்றது சைனா....
விஷயம் இதுதான்:-
இந்தியா போருக்கு தயார் என்கின்றது, சைனாவோ தயார் இல்லை ஆனால் அப்படி இருப்பது போல் தன் நாட்டில் பாவலா செய்கின்றது...
ஏகபட்ட போர் பரணி பாட படுகின்றது, பின் மெல்ல ஹாங்காங்க் பக்கம் மக்கள் கவனத்தை திருப்புகின்றது சைனா, ஆம் அவர்கள் யுத்தத்துக்கு தயார் இல்லை
நிலமையினை கவனிக்கும் இந்தியா சற்று நிம்மதியனாலும் இவர்களை நம்பவே கூடாது, காவலை இன்னும் பலபடுத்தலாம் என அதி நவீன தளவாடங்களுடன் மிக சிறந்த படையுடன் எல்லையில் பலமாக நிற்கின்றது...
#ஜெய்மோடி_சர்க்கார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...