இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே தலைவர் திமுக தலைவர்தான்.
தான் இருப்பதாக அடையாளம் காட்டுவதற்காகவே ஸ்டாலின் தினந்தோறும் அறிக்கை விடுகிறார்.
இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கபூர்வமான ஆலோசனை எதையும் வழங்கவில்லை.
அரசு எதுவுமே செய்யவில்லை என்று, பொய்யான, தவறான குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் முன்வைக்கிறார்.
மு.க.ஸ்டாலின் சொன்னதை கேட்டு நிவாரணம் தந்த எம்எல்ஏ ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டார்.
தகுந்த ஆலோசனையின்றி மு.க.ஸ்டாலின் செயல்பட்டதால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் இழந்து விட்டோம்.
கடுமையாக பணியாற்றுவதால் தொற்று பரவுவது குறைக்கப்பட்டு, உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ஊரடங்கு போடப்பட்டு 90 நாட்களாகி விட்டது, இந்த 90 நாட்களை வீணாக்கிவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.
90 நாட்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு அரசு பணியாற்றியதால்தான், தொற்று பரவலை கட்டுக்குள் வைக்க முடிந்துள்ளது.
அரசியல் ரீதியாக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு மு.க.ஸ்டாலின் பொய்க் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.
தினந்தோறும் தவறான செய்திகளை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார்- முதல்வர் பழனிச்சாமி.
No comments:
Post a Comment