Monday, June 22, 2020

#கொரோனா_அலட்சியம்_ஆபத்து#


சில மரணங்கள் நமக்கு நேரடியாக சில செய்திகளை விட்டு செல்கின்றன.
1 - திரு. அன்பழகன் MLA (62). இவருக்கு எந்தவிதத்திலும் பணத்திற்கு குறைவில்லை. எந்தவித உயர்தர வைத்தியமும் பார்க்க முடியும். ஆனால் கொரோனாவிடம் ஜெயிக்க முடியவில்லை.
2 - திரு. சரத் ரெட்டி (43). இவர் இந்தியாவின் டாப் 25 மற்றும் சென்னையின் டாப் 10 மருத்துவமனைகளில் ஒன்றான விஜயா மருத்துவமனையின் இயக்குநர். ஒரு பெரிய மருத்துவமனையின் இயக்குநர் என்றால் அந்த மருத்துவமனையில் அவருக்கு எந்த மாதிரியான வைத்தியம் பார்த்திருப்பார்கள் என நம்மால் எளிதாக யூகிக்க முடியும். ஆனாலும் கொரோனாவிடம் ஜெயிக்க முடியவில்லை.
3 - திரு. பாலகிருஷ்ணன் (55). இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தொழிற்சாலையின் தலைவர். இவருக்கு உலகின் எவ்வளவு பெரிய மருத்துவமனையின் வைத்தியத்தையும் பெற வசதியிருக்கிறது. ஆனாலும் கொரோனாவிடம் ஜெயிக்க முடியவில்லை.
4. மருத்துவர் சைமன் நியூ ஹோப் மெடிகல் சென்டரின் நிறுவனர். அப்போலோ மருத்துவமும் மேலும் அவரை அறிந்த நண்பர்கள் அனைவரும் அப்பல்லோ என்பதால் அங்கு அட்மிட் செய்ய பட்டார் இருப்பினும் முடியவில்லை.
5.மருத்துவர் வினோத் - 34 வயது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை அளித்தும் பயனின்றி இறந்தார். அவர் ராமச்சந்திரா மருத்துவர் என்பது மற்றொரு தகவல். அவர் நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
6.சுந்தரம் பாஸ்ட்டெனர் சேர்மன். திரு பாலகிருஷ்ணன். அறிமுகம் தேவையில்லை. எவ்வளவோ பணம் இருந்தாலும் மருத்துவத்தில் முடியாத விசயங்கள் எவ்வளவோ உண்டு என்பதற்கு இவரும் ஒரு சான்று.
மேலும் மிக முக்கிய தகவல் பல மருத்துவமனைகள் அட்மிஷன் போடுவதும் இல்லை மேலும் அட்மிஷன் செய்கின்ற மருதுமனைகளைல் படுக்கையும் இல்லை. அதை விட மிக முக்கியம் வைரஸின் தாக்கம் முன்பெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை என்று சொன்ன அதே மருத்துவர்கள் இப்பொழுது தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் மேலும் மரணம் அதிகமாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.
இதுபோல நிறைய உதாரணங்களை தரமுடியும். நமக்கு தெரிந்த நம் அருகாமையிலுள்ள ஆளுமைகளின் கதை இவை.
இதிலிருந்து நமக்கு புரியும் பாடம் ஒன்றுதான். கொரோனாதானே, ஜஸ்ட் மருத்துவமனைக்கு போய் நான்கு நாட்கள் படுத்திருந்துவிட்டு வந்தால் குணமாகிவிடப் போகிறதல்லவா என்ற அலட்சிய மனப்பான்மை கூடாதென்பதே அது.
அரசு லாக்டவுன் ஏன் செய்தார்கள், லாக்டவுனை ஏன் ஓப்பன் செய்தார்கள் என்றெல்லாம் குறை சொல்வதோடு மட்டும் கடந்துவிடாமல் நம் ஜாக்கிரதையை, முன்னெச்சரிக்கையை நாம் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.
எனவே நாம் கடைபிடிக்கும் சுய கட்டுப்பாடும், சுத்தமும் மட்டுமே நம்மை காப்பாற்றும்.
எனவே,
🚫 மிக மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் போகாதீர்கள்.
🚫 அப்படியே போக நேர்ந்தாலும் முகக்கவசம், கையுறை இல்லாமல் போகாதீர்கள்
🚫 எந்த வெளி நபரை சந்தித்த பின்னும் மறக்காமல் சோப்பு, handwash போன்றவை போட்டு நன்றாக கையை கழுவவும்
🚫 வீட்டில் இருப்பதை வைத்து உண்ண பழகுங்கள்.
🚫 லேசான அறிகுறிகளாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனே நடவடிக்கை எடுங்கள்.
🚫 எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்
🚫 தொண்டயை மிக ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள் (இஞ்சி சாறு போன்றவற்றை தினமும் எடுப்பது நல்லது).
🚫 உறவினர், அநாவசியமான நபர்கள் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.
தயவுசெய்து அலட்சியம் வேண்டாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...