1985 நாமக்கல் #MLA இல்ல திருமணத்திற்கு செல்கிறார் #எம்ஜிஆர் அதே நேரத்தில் MLA வீட்டு திருமண மண்டபமே களேபரபட்டு கிடக்கிறது
காரணம், நாமகிரி பேட்டையை சேர்ந்த தொண்டர்ஒருவர் தனக்கும் தன் முறைப் பெண்ணிற்கும் நடக்க விருந்த திருமணத்தை நிறுத்திவிட்டு, எம்ஜிஆர் தாலி எடுத்து கொடுத்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்து தாலியுடன் நிற்கிறார்
இந்த செய்தி காரில் வந்து கொண்டிருந்த எம்ஜிஆருக்கு சொல்லப்படுகிறது,..கார் மணப்பந்தல் வாசலில் நிற்கிறது. அவ்ளவுதான்,அத்தனை செக்யூரிட்டிகளையும் தாண்டி ஒரே பாய்ச்சலுடன் மணப்பெண்ணுடன்
எம்ஜிஆர் முன்னாள் நிற்கிறார் அந்த தொண்டர்
எம்ஜிஆர் முன்னாள் நிற்கிறார் அந்த தொண்டர்
இது தவறான செயல் இனி இது போன்ற செயலை ஒரு போதும் செய்ய கூடாது என்று அறிவுரை கூறி MLA திருமணத்துடன் அந்த தொண்டரின் திருமணத்தையும் நடத்தி வைத்த எம்ஜிஆர், MLA-க்கு பரிசாக கொண்டு வந்திருந்த இரண்டு பணக்கட்டுகளில் ஒன்றை mlaவுக்கும், இன்னொன்றை அந்த தொண்டருக்கும் கொடுத்துவிட்டு கிளம்புகிறார்
நாமகிரி பேட்டையிலுள்ள தன் வீட்டிற்கு வந்து, அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்த அந்த தொண்டருக்கு உடலெல்லாம் நடுக்கம்,அதில் ஒரு லட்சத்து என்பதாயிரம் ரூபாய்,... பொட்டலம் மாறிவிட்டதென்று MLA வீட்டிற்கு ஓடோடி சென்று பொட்டலம் மாறி விட்டது வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
அப்படியெல்லாம் மாறவில்லை எம்ஜிஆர் உனக்கு கொடுத்துதான் வைத்துக் கொள் என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
திருமணத்தை நடத்தி வைத்தாலே போதும் என்று நினைத்த அந்த தொண்டர், தன் வாழ்விலே ஒளியேற்றி வைத்து விட்டாரே என்று அந்த பணத்தை வைத்து நாமகிரிபேட்டையில் வீடு ஒன்றை கட்டி அதற்கு இதய தெய்வம் எம்ஜிஆர் இல்லம் என்று பெயர் வைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார் அந்த தொண்டர்
No comments:
Post a Comment