ஒருமுறை கவிஞர் வாலி அவர்கள் வாழ்க்கையில் மிகவும் நொந்துபோய் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் மதுரைக்கு டி வி எஸ் கம்பெனியில் வேலைக்காக சென்றுவிட வேண்டும் என்று தன்னுடைய பெட்டி படுக்கைகளை கட்டி வைத்துவிட்டார்...
இரவோடு இரவாக கிளம்புவதற்கு முன் இந்தப் பாடலைக் கேட்டு பின்பு தன்னுடைய முடிவை மாற்றி சென்னையிலேயே இருப்போம் என தன்னுடைய வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார். ஜெயித்துக் காட்டினார்.. இதை கவிஞர் வாலி அவர்களே ஒரு பேட்டியில் கூறினார்...
கவியரசர் கண்ணதாசனைப் போல் ஒரு கவிஞர் இன்னும் நமது ஊரில் பிறக்கவில்லை...
"அர்த்தமுள்ள இந்துமதம்" இவருக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது...
நமது வாழ்க்கையில் எந்த நிலையிலும் எதைப்பற்றி சிந்தித்தாலும் அந்த சூழ்நிலைக்கு கண்டிப்பாக ஒரு கவிதை, ஒரு பாடல் எழுதியிருப்பார்.
அந்த அளவிற்கு கண்ணதாசன் அவர்களின் எழுத்துக்கள்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பேசுகின்றது...
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பேசுகின்றது...
இந்தப் பாடலில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த வரிகள்...
" நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து,
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு"...!
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு"...!
இன்றைய லாக்-டவுன் கால கட்டத்தில் இந்த பாடலை ஒரு மூன்று முறையாவது பொறுமையாக படித்து பாருங்கள்..
மயக்கமா கலக்கமா...?
மனதிலே குழப்பமா...?
வாழ்க்கையில் நடுக்கமா...?
மனதிலே குழப்பமா...?
வாழ்க்கையில் நடுக்கமா...?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்..!
வாசல்தோறும் வேதனை இருக்கும்..!
வாசல்தோறும் வேதனை இருக்கும்..!
வந்த துன்பம் எதுவென்றாலும்,
வாடி நின்றால் ஓடுவது இல்லை.
வாடி நின்றால் ஓடுவது இல்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்,
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
மயக்கமா கலக்கமா...?
மனதிலே குழப்பமா...?
வாழ்க்கையில் நடுக்கமா...?
மனதிலே குழப்பமா...?
வாழ்க்கையில் நடுக்கமா...?
ஏழை மனதை மாளிகை ஆக்கி,
இரவும் பகலும் காவியம் பாடு.
இரவும் பகலும் காவியம் பாடு.
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து,
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு...!
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு...!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி.
நினைத்து பார்த்து நிம்மதி நாடு.
நினைத்து பார்த்து நிம்மதி நாடு.
மயக்கமா கலக்கமா...?
மனதிலே குழப்பமா...?
வாழ்க்கையில் நடுக்கமா...?
மனதிலே குழப்பமா...?
வாழ்க்கையில் நடுக்கமா...?
No comments:
Post a Comment