Friday, March 5, 2021

அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகள்.

 அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, 20 சட்டசபை தொகுதிகளும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க., கூட்டணியில், முதல் கட்சியாக, பா.ம.க.,வுக்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக, பா.ஜ., உடன் கூட்டணி பேச்சு துவங்கியது. பா.ஜ., தரப்பில், 60 தொகுதிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதைக்கண்டு, அ.தி.மு.க., மிரண்டது.


latest tamil news



பேச்சுவார்த்தையின்போது, 40 தொகுதிகள் வேண்டும் என, பா.ஜ., பிடிவாதம் பிடித்தது. அ.தி.மு.க., தரப்பில், 15 தொகுதிகளில் இருந்து பேரத்தை துவக்கினர். இதனால் பேச்சில் இழுபறி ஏற்பட்டது. அதேநேரம் தே.மு.தி.க.,வும் அதிக தொகுதிகளை கேட்டது.
‛தே.மு.தி.க., மற்றும் சிறிய கட்சிகளுக்கு சீட் ஒதுக்கவேண்டி இருப்பதால், பா.ஜ.,விற்கு அதிக தொகுதிகள் ஒதுக்க இயலாது' என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


BJP, ADMK, TN election

கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து, தமிழகத்தில் தேர்தலை சந்திக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., - -பா.ஜ., இடையே, நேற்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, தமிழகத்தில், 20 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கபட்டுள்ளன.
இடைத்தேர்தல் நடக்கும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளருக்கு, அ.தி.மு.க., தனது முழு ஆதரவை அளிக்கும். இதற்கான ஒப்பந்தத்தில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வர், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

பா.ஜ.,வுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அதைவிட குறைவான தொகுதிகளை, தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கவாய்ப்புள்ளது. அதேநேரம் கூட்டணியில், அ.ம.மு.க., இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...