2001 ல் ஜெயா ஜெயிக்கவே மாட்டார் என்று ஜூவி முதல் லயோலா குப்பைகள் வரை கணித்தன. காரணம் இந்த திமுகவின் அட்டகாசங்களின் முழு வீரியத்தையும் ஊடகங்கள் கணிக்கவும் இல்லை. அப்படி தெரிந்ததையும் முழுவதுமாக மக்களிடம் கொண்டு செல்லவுமில்லை.
மேலும் ஜெயா மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டுக்கள் கோபங்கள் மக்களிடம் இன்னமும் மிச்சம் இருக்கும் என்று நம்பின.
எனவே ஜெயா வரவே கூடாது என்றுதான் எழுதின.
ஆனால் என்ன ஆயிற்று?? ஜெயா திரும்பி வந்தார். உடனே இந்த கருத்து கணிப்பாளர்கள் நுண்ணிய அளவில் இந்த சாதி, அந்த சாதி, இத்தனை சதவிகித ஸ்விங்.. அத்தனை சதவிகித மாற்றம் என்று தங்கள் கருத்து கணிப்பு பொய்யானதற்கு காரணம் கற்பித்தனர்.
அரசியல்வாதிகளோ.. உடனே இந்த கூட்டு.. இந்த குழம்பு என்று பாடினர். ஜெயா வின் தன்னம்பிக்கையை ஆஹா.. ஓஹோ.. என்று புகழ்ந்தனர்.
ஆகவே தேர்தல் வெற்றியை தோல்வியை மேலோட்டமாக பார்த்து கணிக்க இயலாது. இந்த ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு கதையெல்லாம் நடக்காது.
அதுவும் திமுகவும், அதிமுகவும் பெரிய ஆளுமையில்லாமல், ஊழலிலும் செயல் பாட்டிலும், இலவசங்கள் வாரி இறைப்பதிலும், ஜாதி அரசியல் செய்வதிலும் கிட்ட தட்ட ஒரே தரத்தில் இருக்கும் போது திமுக வாரி குவித்து விடும் என்பதெல்லாம் கொஞ்சமும் சரியில்லை.
2019 தேர்தலில் திமுக 38 இடத்தையும் வென்றதை கண்டு ஊடகங்கள் கிட்டதட்ட ஒரு மயக்க நிலைக்கு தானும் போய் திமுகவையும் தள்ளி விட்டன. இந்த வெற்றிக்கு சிறுபான்மையினரின் ஓட்டு மொத்த ஓட்டும் ஒருங்கிணைந்தது என்றால் இந்த தேர்தலில் இந்துக்களின் ஓட்டுகள் ஒரு 5% ஒருங்கிணைந்தால் போதும்.
#திமுக மண்ணை கவ்வும்.
எனவே மக்களே மனம் தளர வேண்டாம்.
எடப்பாடியின் செயல்பாடுகள் வீணாய் போகாது.
ஸ்டாலினின் உளறல்கள் வீணாய் போகாது.
மிகப் பெரிய ஆச்சரியங்களை இந்த தேர்தல் தரும் என்றே நான் நினைக்கிறேன்.
ஒற்றுமை என்பது சிறுபான்மையினருக்கு மட்டும் சொந்தமானதல்ல !! பெரும்பான்மையினரும் ஒன்று பட்டு தீய சக்திகளை வெல்லலாம்.
No comments:
Post a Comment