Wednesday, April 21, 2021

கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசிக்கு 78 சதவீத செயல்திறன்.

 கொரோனாவுக்கு எதிராக ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவேக்சின் தடுப்பூசி, கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது.

கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசிக்கு 78 சதவீத செயல்திறன்
கோவேக்சின் தடுப்பூசி



















கொரோனாவுக்கு எதிராக ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவேக்சின் தடுப்பூசி, கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது.

இதற்கு மத்தியில் இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையும் நடந்து வந்தது. இதன் 2-வது இடைக்கால பகுப்பாய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த தடுப்பூசி லேசானது முதல் கடுமையானது வரையிலான கொரோனா தொற்றுக்கு எதிராக 78 சதவீத செயல்திறனைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கோப்புப்படம்


இந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றுநோயால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிற வாய்ப்பு 100 சதவீதம் குறைவு எனவும் தெரிய வந்துள்ளது.

இதையொட்டி பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் கொரோனா அலை எழுச்சி பெற்ற நிலையில், அறிகுறிகளுடன் கூடிய 127 பேர் பதிவு செய்யப்பட்டனர். அதில் லேசான, மிதமான, கடுமையான கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 78 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...