மதுரை மாநகரையே குலுங்க வைக்கும் விழா, சித்திரை திருவிழா. குலுங்க வைக்கும் எனும் சொல்லும் போதே தெரியும் அது நம் கள்ளழகர் வைகையில் இறங்குவது தான் என்று.அந்தளவிற்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் இவ்விழா பிரபலமடைந்துள்ளது.
முழுதாக ஒரு மாதம் எடுத்துக் கொண்டு உலகிலேயே அதிக நாட்கள் கொண்டாடப்படும் பிரமாண்ட பண்டிகை இதுவாகத்தான் இருக்கும். மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் இந்த திருவிழாவை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர். இப்பெருவிழாவின் முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கும் அடுத்த 15 நாட்கள் அழகருக்கும் விழா நடைபெறுகிறது. நிகழ்வுகள் திருவிழாவின் முதல் நாள் நிகழ்வு கொடியேற்றம் ஆகும். அன்று இரவு கற்பக விருட்சகம் மற்றும் சிம்ம வாகனத்தில் சுவாமி உலா வருகிறது. அடுத்த நாள் பூதவாகனம் மற்றும் அன்ன வாகனதிலும், மறுநாள் கைலாசபர்வதம் மற்றும் காமதேனு வாகனதிலும் வீதி உலா வரும். நான்காம் நாள் தங்கபல்லக்கிலும் ஐந்தாம் நாள் தங்க குதிரையிலும் எடுத்து செல்வார்கள். ஆறு மற்றும் ஏழாம் நாள் முறையே ரிஷப வாகனம், நந்தீஸ்வரர் வாகனம் மற்றும் யாழி வாகனத்திலும், எட்டாம் நாள் பட்டாபிசேகம் நடைபெறும். இரவு வெள்ளி சிம்மாசன வாகனம் சுவாமி உலா வருகிறது.திக்விஜயம் மீனாட்சி இமயமலை சென்று போர் புரிவதை கூறும் வகையில் நடைபெறுகிறது.
அன்று இரவு இந்திரா விமான வாகனம். மீனாட்சி திருக்கல்யாணம் பத்தாம் நாள் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் சுமங்கலிகள் புதிய தாலிக்கயிறு அணிவார்கள். வேண்டுதலுக்காக அன்று சில பக்தர்கள் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் புதிய தாலிக்கயிறு வழங்குவார்கள். அன்று இரவு யானை வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கு வாகனம் சுவாமி உலா வருகிறது. பதினொன்றாம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது ஆயரகனக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரினை வீதியோரம் இழுப்பர்கள். முதல் தேரில் மீனாட்சி அம்மனும் அடுத்த தேரில் சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடையும் வருவார்கள். அழகர் அவதாரம் தரித்த விஷ்ணு தன் தங்கையான மீனாட்சி திருமணதிற்கு அழகர் கோவிலில் இருந்து மதுரை நகருக்கு புறப்படுகிறார்.கள்ளர்களிடமிருந்து சீர்வரிசையை காக்க நாட்டுக்கள்ளர் போல் கொண்டையிட்டு, கண்டாங்கி கட்டி, காதில் கடுக்கன் அணிந்து, கையில் வளரியுடன் தங்க பல்லக்கில் கிளம்பி வருவார் (அதனாலே அவர் கள்ளழகர்). ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ என்ற பாட்டு மதுரை அனைத்தும் ஒலிக்கும். அந்த பாடலின் இடையில் வரும் இசை அனைத்து மக்களையும் ஆட செய்யும். வரும் வழியில் ஒவ்வொரு மண்டபமும் மக்களுக்கு ஊண் அருளழித்து வருவார். கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வு எதிர் சேவை என்று கொண்டாடப்படுகிறது. அன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பெருமாள் கோவிலை அட்டைகிறார். இரவு முழுவதும் அங்கு உள்ள அணைத்து மண்டபகளிலும் பக்தர்களுக்கு அருளளிப்பார் . எதிர் சேவையின் போது அழகர் அணிய,திருச்செந்தூர் ஆண்டாள்(சூடித்தந்த சுடர்க்கொடி) திருக்கோவிலில் இருந்து மாலை வரும். மதுரை வைகை நதிக்கரையை அடைந்தத அழகரிடம் தங்கள் தங்கை திருமணம் முடிந்துவிட்டதே இபொழுதான் வருகிறீர்கள் என கூடலழகர் பெருமாள் தெருவிக்கிறார். அதை கேட்ட அழகர் தான் கொண்டுவந்த சீர் வரிசைகளை கூடழகர் பெருமாளிடம் கொடுத்துவிட்டு வைகை நதியில் இறங்கிவிட்டு திரும்புகிறார். அழகர் ஆற்றில் இறங்குதல்: இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அமைவது, தண்ணீர் பீட்சுதல் நிகழ்வு. அழகரை வேண்டி பக்தர்கள் 15 to 20 நாட்கள் விரதம் இருந்து வேண்டுவார்கள். தான் வருவதற்க்குள் தன தங்கை திருமணம் செய்துகொண்டால் எனும் கோபத்தை தணிக்கவும், அழகர் மீது உள்ள தீட்டினை கழிக்கவும் தண்ணீர் பீச்சும் நிகழ்வு உள்ளதாக கூறப்படுகிறார்கள். ராமராயர் மண்டகப்படியில் அழகரை எழுந்தருளச் செய்து அங்கு அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடன் நிறைவேற்றப்படுகிறது. தண்ணீர் பிட்சுபவர்கள் ஒவ்வெரு பகுதியல் இருந்தும் கூட்டமாகவே வருவார்கள்.
அதில் தாரை தப்பட்டை மற்றும் பேண்ட் வாத்தியங்களுக்கு ஆடுவார்கள்.அவற்றை காண மட்டுமே திருவிழா போக ஆசை ஏற்படும்.பின் அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் தருவார். அங்கு விடிய விடிய மக்கள் வாண வேடிக்கையுடன் அழகரை தரிசிக்கின்றனர். மறுநாள் காலையில் அழகரை வண்டியூரில் வைகை நடுவே உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், நாரைக்கு முக்தி அளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அப்போது சுதபஸ் மகரிஷியின் சிலை வைக்கப்பட்டிருக்கும். சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் விதமாக நாரை பறக்க விடப்படும். பின் இரவில் ராமராயர் மண்டபத்தில் அழகரை எழுந்தருளச் செய்து தசாவதாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் முத்தங்கி, மச்சம், கூர்மம், வாமன, ராம, கிருஷ்ண அவதாரம் உள்ளிட்ட தசாவதாரத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சியளிபார். பின் மறுநாள் ராமராயர் மண்டகப் படியிலிருந்து வைகைத் திருக்கண், ஆழ்வாரிபுரம், கோரிப்பாளையம் வழியே தல்லாகுளம் சேதுபதி மண்டகப் படியில் அழகர் எழுந்தருளுகிறார். இறுதியாக அழகர் கோவில் நோக்கி அழகர் புறப்பாடு நடைபெறுகிறது !
No comments:
Post a Comment