திடீரென்று ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, டாடா குழுமம் வெளிநாடுகளில் இருந்து 24 கிரையோஜோனிக் கன்டெய்னர்களில் ஆக்சிஜனை விமானம் மூலம் விரைந்து கொண்டு வந்து மக்களிடம் சேர்க்க இருக்கிறது.
மேலும் இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் இங்கே உள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நம்புகிறது.
ஒரு கன்டெய்னர் மூலம் 61620 லிட்டர் ஆக்சிஜன் கொண்டு வரப்படும்.
டாடா குழுமம் இப்பொழுது அவர்கள் டாடா ஸ்டீல் நிறுவனம் மூலம்,
தினமும் 200 முதல் 300
டன் ஆக்சிஜனை பல மாநிலத்திற்கு விநியோகம் செய்து வருகிறது.
சென்ற முறை கொரோனா காலகட்டத்தில் ரூ.1500 கோடி,பல ஆயிரம் வென்டிலேட்டர், பி பி கிட்,பரிசோதனை கருவிகள் என எண்ணிலடங்கா உதவிகளை நமது தேசத்திற்கும் நமது மக்களுக்கும் செய்தது மறக்க முடியாத ஒன்று.
இத்தனைக்கும் ரத்தன் டாடா அரசியல்வாதி அல்ல.....
No comments:
Post a Comment