புளியமரம் தன் அம்மா வீட்டுக்குப் போகவேண்டும் என்று ஆசை படுமாம் ஒவ்வொரு முறையும் எதாவது காரணமாக தடைப்பட்டு போகுமாம் இந்த ஆனி மாதம் செல்லவேண்டும் என்று எண்ணியதாம்
அப்பொழுது மரம் பழங்களை இழந்து இலைகளையும் உதிர்ந்து மொட்டை மரமாக காட்சியாளிப்பதால் இந்த நிலையில் போகக்கூடாது பெண் எல்லாவற்றையும் இழந்து மூளியாக போனால் அம்மா கஷ்டபடுவாள் என்று கொஞ்சம் நாள் பொருத்து இருக்குமாம்
மெதுவாக துளிர்விட ஆரம்பிக்கும் சரி நன்றாக வளரட்டும் என்று எண்ணும்பொழுது பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்
பிறகு பிஞ்சு விட ஐயோ இப்பொழுது கற்பம் தரிக்க ஆரம்பித்து விட்டது
இந்தநிலையில் எப்படி போவது என்று எண்ணுமாம்
பிள்ளை பிறந்த பிறகு போகலாம் என்று போவதை தள்ளி போடலாம் என்று எண்ணும்பொழுது புளியகாய் பழுத்து பழமாக பழமும் விழுந்து விட கூடவே தன் இலைகளும் பழுத்து உதிர்ந்து மொட்டை மரமாகிவிடும் திரும்ப அம்மா வீட்டுக்குப் போக ஆசை வரும்போது பழைய படி எண்ணங்கள் தோன்றுமாம்
ஆக ஒருபோதும் அம்மா வீட்டுக்கு போகும் எண்ணம் கணவாகவே போய்விட்டது புளியமரத்துக்கு
துளிர் சாம்பார் வைக்க உதவும் காய் பழம் எல்லாவற்றையும் மனிதனுக்கு அளித்து விட்டு ஒய்வு இல்லாமல் உழைத்து கொண்டு இருக்கிறது
புளியமரம் மட்டும் அல்ல சில பெண்களுக்கும் இந்த நிலை உண்டாகும்
அம்மா வீட்டுக்குப் போகும் பாக்கியம் இல்லாமல் போய்விடும் ஒன்று புகுந்த வீட்டின் கட்டாய கடமையாக இருக்கும் இல்லை அம்மா வீட்டில் யாரும் அனுமதிக்காத நிலை இருக்கும்
இந்த புளியமரத்தின் கதையை புளியபழத்தை பறிக்கும் பொழுது ஞாபகம் வரும்.
No comments:
Post a Comment