‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
தற்போது, நடிகர் விவேக் நடிப்பில் தமிழில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ மற்றும் லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்து கொண்டிருக்கும் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
பின், கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால், ஏப்ரல் 17-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார். தற்போது, இது தொடர்பாக விவேக்கின் நெருங்கிய நண்பரும், அவருடன் பல படங்களில் இணைந்து வலம் வந்த நடிகருமான செல் முருகன் ட்விட்டரில் “அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை…
ஓர் மரணம் என்ன செய்யும். சிலர் புரொஃபைலில் கருப்பு வைப்பார்கள். சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள். சிலர் Rip-புடன் கடந்து போவார்கள். சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள். சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள். ஆனால், அண்ணா… உண்மையான ஜீவன்.. உன் உயிர் தோழன் என் முருகனை… விட்டுவிட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே! இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்! இனி என் முருகனுக்கு யார்? துணை… விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்? இனி அவனுக்கு யார்? துணை.. யார்? துணை…. யார்? துணை……..” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment