நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மன ரீதியாக,
உடல் ரீதியாக,
பண ரீதியாக
மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...
விழுந்தால் அழாதே . . .எழுந்திரு
தோற்றால் புலம்பாதே . . .போராடு
கிண்டலடித்தால் கலங்காதே . . .மன்னித்துவிடு
தள்ளினால் தளராதே . . .துள்ளியெழு
நஷ்டப்பட்டால் நடுங்காதே . .நிதானமாய் யோசி
ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .எதிர்த்து நில்
நோய் வந்தால் நொந்துபோகாதே . .நம்பிக்கை வை
கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .கலங்காமலிரு
உதாசீனப்படுத்தினால் உளறாதே . .உயர்ந்து காட்டு
கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .அடைந்து காட்டு
மொத்தத்தில் நீ பலமாவாய்
சித்தத்தில் நீ பக்குவமாவாய்
உன்னால் முடியும்
உயர முடியும் . . .
உதவ முடியும் . . .
உனக்கு உதவ நீ தான் உண்டு
உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . .
உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .
நீயே பாறை.நீயே உளி . . .
நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .
நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .
நீயே வளர்வாய் . நீயே அனுபவிப்பாய் . . .
நீயே நதி . . . நீயே ஓடு . . .
நீயே வழி . . . நீயே பயணி . . .
நீயே பலம் . . . நீயே சக்தி . . .
நீயே ஜெயிப்பாய்
எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே....
No comments:
Post a Comment