*முந்திரி
*பாதாம்
*பிஸ்தா
*உலர் திராட்சை
*கருப்பு திராட்சை
*அத்தி
*கருப்பு பேரிச்சை
*பனங்கற்கண்டு
*நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்*
1.மன அழுத்தத்தை விரட்டும் நட்ஸில் வால்நட்ஸில் ஆல்பா லினோலினிக் என்னும் மன அழுத்தத்தை விரட்டும் அமிலமானது உள்ளது. எனவே ஆபிஸில் வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள், அவ்வப்போது வால்நட்ஸை சாப்பிட்டு வாருங்கள். இதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். நுரையீரல் புற்றுநோயை தடுக்கும்
2.பிஸ்தாவை டயட்டில் சேர்த்து வந்தால், நுரையீரல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம். மேலும் ஆய்வு ஒன்றிலும் பிஸ்தாவில் அதிக அளவில் காமா டோகோபெரால் என்னும் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் கெமிக்கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
3.கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும் நட்ஸில் பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் பிஸ்தா போன்றவற்றில் நல்ல கொலஸ்ட்ராலானது நிறைந்துள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் சக்தி கொண்டவை. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், இந்த நட்ஸ்களை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.
4.மூளைக்கான சிறப்பான உணவுப் பொருள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் நட்ஸை சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மூளையில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன், நரம்பு மண்டலத்தை பாதுகாத்து, ஞாபக மறதி வராமல் தடுக்கும். விந்தணுவின் தரத்தை அதிகரிக்கும் நட்ஸை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணுவின் தரமானது அதிகரிக்கும். எனவே குழந்தை பெற்று கொள்ள நினைக்கும் ஆண்கள், தினமும் ஒரு கையளவு நட்ஸை சாப்பிட்டு வாருங்கள்.
5.உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம் அடிக்கடி பசியெடுப்பது போல் இருந்தால், அப்போது ஸ்நாக்ஸாக நட்ஸை சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதுடன், உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும். ஆற்றல்மிக்க உணவுப் பொருள் நட்ஸில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், நட்ஸை சாப்பிட்டால், உடலின் ஆற்றலானது அதிகரிக்கும். எனவே தினமும் காலையில் சிறிது நட்ஸ் சாப்பிட்டு வருவது, காலையில் உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ளும்.
6.புரோஸ்டேட் புற்றுநோய் பிரேசில் நட்ஸில் செலினியம் அதிகம் உள்ளதால், இதனை ஆண்கள் சாப்பிட்டால், ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயை 60% குறைக்கலாம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நட்ஸில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இதனை உட்கொண்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். விறைப்புத்தன்மையும் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment