ஓசூரில் 2.27 கோடி ரூபாய் சிக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகளின் மெத்தன நடவடிக்கையை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. அதே நேரம் அரசுக்கு தெரியாமல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றினரா என்ற சர்ச்சை வெடித்து உள்ளது.
* ஓசூர் நேரு நகர் 2 வது தெருவில் வசித்து வருபவர் ஷோபனா 58.
* வேலுார் கோட்ட பொதுப் பணித்துறை தொழில்நுட்ப கல்வி பிரிவு செயலாளராக பணியாற்றி வந்தார்.
* ஒப்பந்ததாரர் களிடம் அதிகளவில் லஞ்சம் வாங்கி வருவதாக கிடைத்த புகாரின்படி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது அறை மற்றும் ஓசூரில் உள்ள வீட்டில் கடந்த 2 மற்றும் 3 ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.
# *கணக்கில் வராத 2 கோடியே 27 லட்சத்து 75 ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் 35 பவுன் தங்க நகை ஒரு கிலோ வெள்ளி 27 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான நிரந்தர டெபாசிட் ஆவணங்கள் பினாமி பெயரில் இருந்த 14 சொத்து ஆவணங்கள் ஒரு வங்கி லாக்கர் சாவி 11 வங்கி கணக்கு விபரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.*
* அவர் மீது நேரடியாக யாரும் புகார் செய்யாததால் போலீசார் அவரை கைது செய்யவில்லை.
* உயர் அதிகாரிகள்'சஸ்பெண்ட்' நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
* ஷோபனா வீட்டின் ஒவ்வொரு அறையிலும் பைகளில் தனித்தனியாக கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
* அதை யார் வழங்கியது என்ற விபரமும் அதில் இருந்துள்ளது.
* *லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி அரசு அதிகாரி மீது அறிக்கை வழங்கினால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு நிறுத்தப்படும். *
* *வழக்கு முடியாமல் பணியில் இருந்து ஓய்வு பெறக்கூட முடியாது.*
* ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2.27 கோடியுடன் சிக்கிய ேஷாபனாவிற்கு திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* இது பல்வேறு சந்தேகம், கேள்வியை எழுப்புகிறது.
# *தீபாவளி சமயத்தில் ஷோபனா தன் உயர் அதிகாரிகள் மற்றும் ஆளும் அரசியல் கட்சியினருக்கு வழங்க வேண்டிய கமிஷன் தொகையை வழங்காததால் மேலதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்து அவரை மிரட்டும் வகையில் சோதனை நடத்த ஏற்பாடு செய்தார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.*
* அதுமட்டுமின்றி வங்கி லாக்கர் சாவியை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லாக்கரை திறந்து பார்த்தனரா அதில் என்ன ஆவணங்கள் இருந்தன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை;
* லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வாய் திறக்காமல் மவுனம் காக்கின்றனர்.
# *ஷோபனாவின் ஜாதி பின்னணியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்ததாகவும் உயர் அதிகாரிகளை அவர் சரி கட்டி விட்டதாகவும் தகவல் பரவுகிறது.*
* போக்குவரத்து சோதனைச்சாவடிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது அறிக்கை அளித்தவுடன் பலரது பதவி உயர்வு இன்று வரை பாதித்துள்ளது.
# *ஆனால்ஷோபனா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைபற்றிய பின்னரும் கூட முயைாக துறைரீதியான விசாரணை நடத்தாமலும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமலும் இடமாற்றம் மட்டும் செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. *
* அரசுக்கு தெரியாமல் தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பணம் கைப்பற்றினரா என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது.
No comments:
Post a Comment