தமிழ் திரையுலகையும் அதன் இம்சை நடிகர்களையும் கட்டுபடுத்தும் ஒரே கட்சி பாமக என்பது மறுபடியும் நிரூபிக்கபட்டிருக்கின்றது
அந்த செய்பீம் பட விவகாரத்தில் முதலில் தாங்கள் செய்தது சரியென மல்லுகட்டிய சூரியர் தரப்பு அன்புமணியின் வருகைக்கு பின் மன்னிப்பு கேட்டு ஓடிவிட்டது
இது தமிழ் சினிமா எனும் பூதத்தையும் கட்டுபடுத்தும் சக்தி ஒன்று தமிழகத்தில் இருக்கின்றது என்பதை காட்டுகின்றது
அன்புமணி அய்யா அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த மணிசாரின் "பொன்னியின் செல்வன்" படம் வெளிவரும் பொழுது ஏகபட்ட தமிழின அவமரியாதை, இந்து எதிர்ப்பு அடையாளமெல்லாம் தாங்கி வரும்போல் தெரிகின்றது
அப்பொழுது" சின்னய்யாவின் சேவை நிச்சயம் தேவை" என்பதால் அதற்கு தயாராகும் பொருட்டு அன்புமணியார் இப்பொழுது கொஞ்சம் ஓய்வெடுத்து கொள்ளலாம்
எனினும் "சிங்கம்" "எதற்கும் துணிந்தவன்" என சொல்லிகொண்டிருந்த சூரியரை மன்னிப்பு கேட்டு ஓடவைத்த அன்புமணியார் நிச்சயம் புலியாகத்தான் இருக்க முடியும்
அந்த புலிமணியார் தங்கள் கட்சி பெயரை "பாட்டாளி வரி புலிகள்" என மாற்றினாலும் சரியாகத்தான் இருக்கும்
சிங்கங்கள், சிறுத்தைகள் உலாவும் பகுதியில் புலிகள் இருக்க கூடாதா என்ன?
அதெல்லாம் இருக்கட்டும், செய்பீம் என கத்திய சூரியர் அடுத்து கோவை குண்டுவெடிப்பு கதையினை எடுத்து நடித்து புரட்சி பேசுவார் என நம்பபடுகின்றது, பார்க்கலாம்.
No comments:
Post a Comment