ஒரு நாள் பள்ளிக்கு சென்று விட்டு எடிசன் வீடு திரும்பினார். அப்போது ஆசிரியர் கொடுத்ததாக ஒரு பேப்பரை தனது அம்மாவிடம் கொடுத்தார் எடிசன்.
அதனை பிரித்துப்பார்த்த எடிசனின் அம்மாவிற்கு கண்களில் நீர் வழிந்தது. அவர் தன்னை தேற்றி கொண்டு அந்த கடிதத்தை படித்தார் .
“Your son is a Genius. This school is not the right place for him, and there are no efficient teachers to train him. So, please train him yourself.”
அதாவது உங்களது மகன் ஒரு மேதை. அவன் படிப்பதற்கு இது தகுந்த இடம் அல்ல, மேலும் அவனுக்கு சொல்லி கொடுக்க கூடிய அளவிற்கு இங்கே திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை” என்றார்.
அதன் பிறகு பள்ளிக்கு செல்வதை எடிசன் நிறுத்திக்கொண்டார். தனது தந்தையின் மூலமாக கிடைத்த புத்தகங்களை வீட்டிலேயே படித்து தனது அறிவை பெருக்கிக்கொண்டார்.
தனது அம்மா இறந்த பிறகு ஒருமுறை அலமாரியை பார்க்கும் போது தனது இளமைப்பருவத்தில் ஆசிரியர் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் உண்மையில் எழுதி இருந்தது இதுதான்
School cannot allow your son to attend classes anymore, he is mentally impaired. He is rusticated.”.
அதாவது, உங்களது குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியாக இல்லை ஆகவே அவனை இனிமேல் வகுப்பில் அனுமதிக்க முடியாது” என எழுதி இருந்தது.
இதை பார்த்து தான் அவரது அம்மா கண்ணீர் வடித்து மாற்றிக் கூறினார். ஒருவேளை கடிதத்தில் இருந்தபடியே.,
அவரது அம்மா படித்திருந்தால் எடிசன் என்ற விஞ்ஞானி அப்போதே முடங்கிப்போயிருப்பார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஊக்கம் கொடுக்க இப்படியொரு அம்மா இருந்தால் நிச்சயமாக எந்தவொரு குழந்தையும் மேதை ஆகும்.
எந்தவொரு கண்டுபிடிப்பாளருக்கும் தோல்வி ஏற்படவே செய்யும். அதிலிருந்து கற்றுக்கொள்பவர் சாதிக்கிறார். எடிசனும் அவ்வழியே.
எடிசன் ஆயிரக்கணக்கில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அவர் அதற்காக எத்தனை முறை தோல்வியை தழுவியிருக்கிறார் என்பதை பெரும்பாலானவர்கள் பார்ப்பதில்லை.
உதாரணத்திற்கு, மின் விளக்கினை கண்டுபிடித்தாயிற்று, ஆனால் நீண்ட நேரம் நீடித்து எரிவதற்கு தகுந்த மின் இழையை எந்த பொருளில் உருவாக்குவது என்பதில் பெரிய சிக்கல் உண்டானது.
எந்த பொருளில் செய்தாலும் அது உருகிப்போனது அல்லது துண்டானது. கிட்டத்தட்ட 5000 முறை வேறு வேறு பொருள்களால் ஆன மின் இழையை அவர் சோதனைக்கு உட்படுத்தினார்.
அப்போதும் அவர் ஓயவில்லை, கேட்டால் இதையெல்லாம் நான் தோல்வி என சொல்ல மாட்டேன். 5000 பொருள்களும் இதற்கு பயன்படாது .
என்பதை நான் கண்டறிந்து இருக்கிறேன் என நம்பிக்கையோடு பேசுவார் எடிசன். இறுதியாகத்தான் டங்ஸ்டன் இழையை கண்டுபிடித்தார்.
டிசம்பர் 10,1914 இல் நியூ ஜெர்சியில் இருக்கக்கூடிய வெஸ்ட் ஆரஞ்சு பகுதியில் இருக்கும் எடிசனின் மிகப்பெரிய தொழிற்சாலை தீ விபத்தை சந்தித்தது.
10 மிகப்பெரிய தொழிற் கூடங்கள் இந்த தீ விபத்தில் சிக்கி இருந்தது. அந்த தருணத்தில் .,
எடிசன் அமைதியாக ஓரமாக உட்கார்ந்து கொண்டு தனது தொழிற்கூடம் தீயில் எரிவதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார்.
அதோடு நிற்காமல், அருகே இருந்த அவரது மகனை அழைத்து வீட்டில் இருக்கும் உன் அம்மா மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு வா.
இனி எப்போதும் அவர்களால் இப்படியொரு தீ விபத்தை பார்க்க முடியாது என்றார்.
அதிர்ச்சி அடைந்த அவரது மகன் “அப்பா நமது முழு தொழிற்கூடமும் தீயில் இரையாகிக்கொண்டு இருக்கிறது, இப்படி சொல்கிறீர்களே என்றார் .
அதற்கு எடிசன் “ஆமாம் நமது தொழிற்கூடம் தற்போது தீயில் சாம்பலாகிக்கொண்டு இருக்கிறது.
அதோடு சேர்த்து நமது தவறுகளும் சேர்ந்து தான் சாம்பலாகிக்கொண்டு இருக்கிறது.
நாம் நாளை மீண்டும் துவங்குவோம்” என்றார். இதுதான் எடிசன். இதனால் தான் அவரால் உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளராக உயர முடிந்தது.
No comments:
Post a Comment