ஒரு குடிகாரனை சந்தித்த பாதிரியார் அவனை திருத்த எண்ணி அவனிடம் பேசினார்,
"தம்பி! குடிகாரர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. குடிக்காத உன் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் சொர்க்கத்தில் இருக்கும் பொழுது நீ மட்டும் தனியாக நரகத்தில் இருப்பாய்!"
அந்த குடிகாரனுக்கு கண்களில் நீர் கோர்த்தது. தழுதழுத்த குரலில் பாதிரியாரிடம் கேட்டான்,
"சாமி! வெறுமனே குடிக்கிற நானே நரகத்துக்குப் போவேன்னா எனக்கு மது விற்ற கடைக்காரன், ஊற்றி கொடுத்தவன், அந்த மது பாட்டில்களுக்கெல்லாம் தண்டனை கிடையாதா?"
குடிகாரன் திருந்தி வருவதில் பாதிரியாருக்கு சந்தோஷம் தொற்றிக் கொண்டது. உற்சாகமாக பதிலளித்தார்,
"அந்த மது பாட்டில்கள் உட்பட அவர்களும் உன்னுடன் நரகத்தில் தான் இருப்பார்கள்"
மெதுவாக கண்ணீரை துடைத்துக் கொண்டு குடிகாரன் மீண்டும் கேட்டான்,
"அப்படீன்னா அந்த மதுக் கடைக்கு வெளியே சிக்கன் வறுக்கிறவன், அந்த சிக்கன், அதெல்லாம் ...?"
குடிகாரன் பாதிரியார் வழிக்கு வருவதை உணர்ந்த பாதிரியார் துள்ளி குதித்து பதில் சொன்னார்,
"அந்த சிக்கன் உட்பட வறுக்கிறவனும் அடுப்போடும், எண்ணை சட்டியோடும் நரகத்தில் உன்னுடன் இருப்பார்கள்"
இப்பொழுது அந்த குடிகாரன் மிக உற்சாகமாக சொன்னான்,
"அப்போ நரகத்துக்கு நான் போக தயார் சாமி! நீங்க சொன்ன ஆளுங்களும், ஐட்டங்களும் என்னோடு இருக்கும் போது அந்த இடம் நரகமாவா இருக்கும்? தானா சொர்க்கமா மாறிடாது? எங்கே நான் மட்டும் தனியா இருக்கணுமோன்னு பயந்து அழுதேன். உங்க விளக்கத்தை கேட்ட பிறகு தான் திருப்தியா இருக்கு. இனிமேல் எந்த பயமும் கவலையும் இல்லாம நிம்மதியா குடிச்சுட்டு நரகத்துக்கு போய் சந்தோஷமா இருப்பேன் சாமி!"
No comments:
Post a Comment