Sunday, November 21, 2021

பொது தரிசனத்தை விட Vipதரிசனத்திற்க குருமார்கள் (பணத்திற்காக) செய்வதை சகிக்க முடியவில்லை.

 திருச்செந்தூர் முருகன் கோயில் கருவறை கடல் மட்டத்தை விட மிக தாழ்வாக இருக்கிறது...ஆழி பேரலையும் என் வாசல் நெருங்காது என கம்பீரமாக செந்தூர் முருகன் சிரிக்கிறான்.

புயல் காற்று வந்தாலும் கோயிலினுள் ஒரு துளி கடல்நீர் கசிவை பார்க்க முடியாது.
அந்த அளவுக்கு மேலுள்ள மிருதுவான மணல் பாறைகள் அனைத்தையும் முழுமையாக தோண்டி எடுத்து அதனுள் கடினப்பாறைகளை பதித்து கோயிலை கட்டியுள்ளார்கள்.
1649ல் திருசெந்தூர் கோயிலை சிலகாலம் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த டச்சு வீரர்கள், கோயிலைவிட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் வந்தபோது, கோயிலுக்கு தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் கோயிலை முற்றிலும் தகர்பதர்க்காக பீரங்கிகள் கொண்டு தொடர்ந்து தாக்கினார்கள்.
இருப்பினும் சிறிதளவுகூட சேதம் கோயிலுக்கு ஏற்படவில்லை.அந்த அளவுக்கு கோயிலின் கட்டுமானம் உறுதியாக இருந்திருக்கிறது.
அதிர்ந்துபோன டச்சுகாரர்கள் கோயிலிலுள்ள இரண்டு சிலைகளை மட்டும் எடுத்துகொண்டு ஓடிவிட்டார்கள்!
ஆனால் அதையும் திருச்செந்தூர் கடல் எல்லையை தாண்டி எடுத்து செல்ல முடியவில்லை காற்றும் புயலும் வந்து கப்பலை கவிழ்க்க பார்த்தது.இந்த சிலையால்தான் நமக்கு ஆபத்து என அதை கடலில் போட்டு தப்பி ஓடினார்கள்..பின்னர் செந்தூர் முருகன் ஒரு பக்தர் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை கருடனாக வட்டமடித்து காட்டி எலுமிச்சை பழம் மிதக்க செய்து சிலையை மீட்க வழிகாட்டினார் மீண்டும் சிலைகள் கோயிலை வந்தடைந்தது.
டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி குடியேறிய இடங்களில் அவர்களால் அழிக்கமுடியாமல் விட்டுப்போன ஒரே கோயில் திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டும்தான் என்பது மற்றுமொரு கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...