தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் பலரும் , மத்திய அரசியல்வாதிகளில் பலரும், தங்களுக்காக லஞ்சம் மற்றும் இதர சட்டவிரோதமான முறையில் பணத்தை சேர்ப்பது ஒன்றே பிரதான பணியாக கொண்டுள்ளார்கள். நேர்மையாக செயல்படுபவர்கள் மிக சிலரே உள்ளனர்.
மக்கள் பிரச்சனையை தீர்க்க எந்த முயற்சியும் செய்வதில்லை.
அண்டை மாநிலங்களான ஆந்திர, கர்நாடக அரசியல்வாதிகள் லஞ்சம் மற்றும் இதர சட்டவிரோதமான முறையில் பணத்தை சேர்த்தாலும், மக்கள் நலனுக்காவும் சிறிது நேரம் செலவழிக்கிறார்கள்.
ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் சராசரி மழையளவு 950 மில்லிமீட்டர் பெய்தும், இங்கே உள்ள 116 அணைகளில் 170 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே சேமிக்க படுகிறது. மீதம் உள்ள தண்ணீர் வெள்ளப்பெருக்காகி மக்களுக்கு துன்பம் தருகிறது. அந்த வெள்ளத்தை வடிய வைக்கிறேன் என கடலுக்கு அனுப்ப பெருமளவு பணத்தை விரயம் செய்வதுடன், இங்கும் அங்கும் ஓடி உழைப்பதாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நடித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்; நிரந்தர தீர்வு காண முயலுவதில்லை. ஒவ்வொரு வருடமும் இதே நாடகத்தை நடத்தி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அதே சமயம் ஆந்திராவில் ஒரு ஆண்டில் சராசரி மழையளவு 902 மில்லிமீட்டரே பெய்தபோதும், அங்கே உள்ள 343 அணைகளில் 919 டி.எம்.சி தண்ணீர் சேமிக்க படுகிறது.
அதே சமயம் கர்நாடகாவில் ஒரு ஆண்டில் சராசரி மழையளவு 722 மில்லிமீட்டரே பெய்தபோதும் அங்கே உள்ள 231 அணைகளில் 580 டி.எம்.சி தண்ணீர் சேமிக்க படுகிறது.
அங்கு பெருமழையின்போது தண்ணீர் வீணாக சென்றபோதும் மழை இல்லாத கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதில்லை.
தமிழ்நாட்டில் தேவையான அளவுக்கு ஏரிகள் குளங்கள் அணைகள் கட்டி கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதை தடுக்க முயலுவதில்லை.
மக்களுக்கு தேவைப்படும் பாலை தர பசுமாடுகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த எதுவும் செய்யாமல் 30% பால், மீதம் 70% சோயா, உடலுக்கு கெடுதி தரும் ரசாயனங்களை கொண்டு பால் போல காட்சி தரும் பொருளை தயார் செய்து கலப்படம் செய்து விற்கிறார்கள். பாலைப்போலவே காட்சி தரும் சோயாவை அரசாங்கமே கலப்படம் செய்து மக்களுக்கு விநியோகிக்கிறது.
அதுபோலவே நாட்டில் உற்பத்தியாகும் எள், வேர்க்கடலை, சூரியகாந்தி போன்றவற்றை உபயோகித்து தயாராகும் எண்ணெய் மட்டுமே விநியோகித்தால் மக்களில் பாதி பேருக்கு கூட எண்ணெய் கிடைக்காது.
பாமாயில் உபயோகிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய குறைவு தெரிந்தநிலையில், பல உலக நாடுகள் பாமாயிலை தடை செய்துள்ளது தெரிந்தும், பாமாயில் இறக்குமதி செய்து கலப்படம் செய்வதை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை.
ஆக இங்கு பொருட்கள் பற்றாக்குறையை தீர்க்க எந்த முயற்சியும் அரசியல்வாதிகளால் செய்யப்படுவதில்லை.
தரமான பொருட்கள் பற்றாக்குறை காரணமாக கலப்படம் செய்து அரசாங்க ஆதரவுடன் மக்களுக்கு தரப்படுகிறது.
"மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உங்கள் உடல்நலத்திற்கும் கேடு" என விளம்பரத்தை அச்சடித்துவிட்டு, அந்த விஷத்தை பற்றாக்குறை இல்லாமல் தயாரித்து, அரசாங்கமே வெட்கமில்லாமல் விற்கிறது.
மற்ற பற்றாக்குறைகளை தீர்க்க முடியாத அரசியல்வாதிகளிடம் வீண் தம்பட்டங்களுக்கு குறைவில்லை
மார்கெட்டில் விற்கப்படும் அனைத்து தானியங்கள் சமையல் பொருட்கள் உட்பட அனைத்திலும் 60 சதவீதம் கலப்படமே ....
இந்தியாவில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும், கார்பொரேட் கம்பனிகளும் தரமான பொருட்களை தயாரிக்க முயலாமல், பொய்யை மட்டுமே சொல்லி அவர்கள் தயாரிப்புகளை விற்பனை செய்கிறார்கள்.
இந்த பொய்க்கு தண்டனை தராமல் மத்திய மாநில அரசாங்கங்களால் ஊக்குவிக்கப்படுவது தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
விளம்பரங்களால் ஏமாறாத பொதுமக்கள் இந்தியாவில் எவரும் இல்லை. இந்த பொய் விளம்பரங்களில் கூறப்படுவதுபோல அவர்கள் தயாரிப்புகளை உபயோகித்ததால் யாருடைய ஆடையிலாவது மின்னல் அடிக்கும் வெண்மை கிடைத்துள்ளதா ? அழுக்கு, கறை போய்யுள்ளதா ? எவருடைய குழந்தையாவது உயரமாகவோ, புத்திகூர்மையாகவோ உறுதியான உடலையோ பெற்றுள்ளதா ?
அத்தனையும் பொய் என தெரிந்தும், பணத்திற்காக பொய் பேசி நடிக்கும் விபச்சார கூத்தாடிகள், அதை விளம்பரப்படுத்தும் விபச்சார உடகங்கள்......... அதற்க்கு துணை போகும் அரசியல்வாதிகள் .....
ஆக இங்கு எவருக்கும் வெட்கம் மானம் இல்லை, அவர்களுடைய எதிர் கால சந்ததிகள் நல்வாழ்வு மீதும் மற்றும் சமூகத்தின் மீதும் அக்கறை இல்லை.
பொய்யான விளம்பரங்கள் மூலம் அரசாங்க ஆதரவுடன் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அரசியல்வாதிகளும் ஏமாற்றுகிறார்கள்.
No comments:
Post a Comment