1. ஆ.ராசா:-
கோடிகளில் பந்தா காண்பித்த பச்சாக்களை.. லட்சம் கூடிய என அலறவைத்தவர். இந்தியர்களை மதிக்காத உலக ஊடகங்களை நம் தமிழ்நாடு எனும் மாநிலத்தின் பக்கம் திருப்பிய பெருமைக்குரியவர்.
2. தமிழக கம்யூனிஸ்ட்: இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி ஆனானப்பட்ட திமுகவிடமே இருபத்து ஐந்து கோடிக்கு விற்ற சாமர்த்தியம் உள்ளவர்கள். ஆனால் பழயதை மறக்காமல் இன்னமும் உண்டியல் கைகளில் ஏந்தி வருபவர்கள்.
3. தமிழக ஊடகங்கள்: உண்மைகள் மக்கள் தெரிந்து கொண்டால் அதிர்ச்சி அடைவார்கள் என்ற நல்ல எண்ணத்தில் தேவைப்பட்ட செய்திகளை் மட்டுமே "கவர்" செய்பவர்கள். பொய்யை மெய் ஆக்கவும் மெய்யை பொய் ஆக்கவும் தெரிந்த வல்லுநர்கள். நடுநிலமை தவறாவதவர்கள்.
4. கலைஞர்: ஊழலுக்கு தாம் நெருப்பு என சொன்னதோடு மட்டுமன்றி வாழ்ந்ததும் காட்டியவர். குடும்பம் வேறு கட்சி வேறு அல்ல என வாழ்ந்து காட்டியவர். விஞ்ஞான பூர்வமாக எதையுமே செய்யலாம் என நிரூபித்தவர்.
5. தமிழக ஜோசியர்கள்: இன்று பல கோவில்களில் கூட்டம் வர காரணமானவர்கள்.. அகல்விளக்கை மட்டுமே கேள்விப்பட்ட தமிழக மக்களை... தேங்காயில் விளக்கு மாங்காவில் விளக்கு பூசணியில் விளக்கு வாழைப்பழ விளக்கு என பல தரப்பட்ட ஐட்டங்களை காண்பித்தவர்கள். எந்த தப்பையும் செய்யலாம் பரிகாரம் உண்டு சரி்பண்ணிடலாம் என நம்பிக்கை ஊட்டுபவர்கள்.
6. இலங்கை தமிழர்கள் :
தமிழ் அரசியல்வாதிகள் நமக்கு நல்லது செய்வார்கள் என தலைமுறைகளாக நம்பிக்கையோடு வாழ்பவர்கள்.. தபிழ்நாட்டிலிருந்து யார் வந்து உங்களை காப்பாற்றுவொம் என சொன்னாலும் நம்பியே வாழ்பவர்கள்.
7. பெரியார் ராமசாமி நாயக்கர்: வெறுத்தவர்களுக்கும் சேர்த்தே உழைத்தவர். அஞ்சுக்கும் பத்துக்கும் அக்கிரகாரங்களில் அலைந்த அந்தணர்கள் இன்று அகிலம் எங்கும் இருக்க காரணமானவர். இதைவிட வேறு என்ன வேண்டும்.
8. இண்டு ராம்: தனி மனிதன் செயல்பாட்டால் சாம்ராஜ்யத்தையும் சாய்க்க முடியும் என காட்டியவர். செயல்வீர்ர்.
9. தமிழக போராளிகள்:
போராட்டம் மூலமாக பிரியானி பொட்டலங்கள் மட்டுமல்ல ....மாத மளிகை சாமான்களும் இன்னோவா கார்களும் கிடைக்கும் என சாதாரண மக்களுக்கும் புரியவைத்து தமிழக மக்களை போராளிகளாக ஆசைப்பட வைத்தவர்கள்..
10. தமிழக மக்கள்:
தம் குடும்பத்தை மறந்து, தானும் சம்பாதிக்காமல் அடுத்தவர்களையும் பிழைக்க விடாமல் செய்த... காமராஜர் கக்கன் போன்றவர்களை.... நீங்கள் போய் உங்க வீட்டை முதலில் கவனிங்க.. என கனிவோடு அனுப்பி விட்டு... அறுபது வருடங்களாக விடியலை நோக்கி நம்பிக்கையோடு வாழ்பவர்கள்...
No comments:
Post a Comment