இந்த படத்தில் இருப்பவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி சேலத்தில் பேருந்து நிலையம் அருகே இருப்பவர் அவரது நெற்றியில் பாருங்கள் திருமண்காப்பு இந்த காப்பு இல்லாமல் இவர் இந்த தொழில் செய்ய வீட்டில் இருந்து புறப்படமாட்டார்
காலையில் எழுந்து சிறிதாக தனக்கு தெரிந்த ஒரு சில பெருமாள்_ஸ்லோகம் சொல்லி பகவானை பிரார்ததித்து பின் தொழிலுக்கு வந்தால் மாலை ஆறுமணிவரை தொழில் செய்யும் இடத்தில் இருப்பார்
தொழில் #பகவத்_கிருபையால்( அவர் சொன்ன வார்த்தை) நல்லா ஓடுது யாரும் நம்மை கேலி செய்வதில்லை தொந்திரவு செய்வதுமில்லை புலால் உண்ணுவதில்லை மாற்று மதத்தவர் பழம் காய் கொடுத்தால் வாங்கிகொள்வேன் ஆகாரம் டீ காபி வாங்கி கொடுத்தால் மறுத்துவிடுவேன் அதுபோல் அதிக கூலியும் கேட்பதில்லை என கூறுகிறார்
நம் வைணவ குழந்தைகள் ஏன் அலுவலகத்துக்கு செல்லும் பல வைணவர்கள் ஊர்ததவபுண்டரம் ( திருமண் காப்பு) தரித்து பள்ளிக்கு அலுவலகத்துக்கு செல்வதை தவிர்க்கும் இக்காலத்தில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி தினமும் எதை பற்றியும் கவலைபடாமல் ஊர்த்தவபுண்டரம் தரித்து வருகிறார்
உண்மையான நாராயணனை பற்றிய ஶ்ரீவைணவன் இவர் என கூறுவதில் தவறுல்லை
பஞ்சசம்ஸ்காரம் செய்து கொண்டால் அய்யங்கார் என்று கூட சொல்லி விடலாம்
#பிரபந்தம் சேவிப்பதும் ஆராதனை செய்வதும் ஒரு வகை என்றால் பகவத் நாராயணனிடம் மனதால் சரண்டைவது இன்னொருவகை இவர் மனதால் சரண்டைந்தவர்... எதை பற்றியும் பற்றில்லாத மகான்
வாழ்த்துவோம் இவரை...
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே...
No comments:
Post a Comment