சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. சூரியனுக்கே ஞாயிறு என்ற பெயர் உண்டு. தொல்காப்பியத்தில் சூரியனை ஞாயிறு என்றே குறிப்பிட்டுள்ளனர். ஞா என்றால் நடுவில் தொங்குகிற. கயிறு என்றால் இறுகப் பற்றிக் கொண்டுள்ள. நடுவில் இருக்கும் சூரியன் மற்ற கிரகங்களை இறுகப் பற்றிக் கொண்டுள்ளது என்பது இதன் பொருள். அதன் பிடி தளர்ந்தால் உலக மக்களின் கதி என்னாகுமென்றே தெரியாது. சூரியன் என்னும் சொல்லுக்கு இயக்குபவன் என்றும் பொருள். இந்த உலகையே இயக்குபவர் என்பதால் அவருக்கு நாம் விழா எடுக்கிறோம்.
ஞாயிறு, கதிரவன் அல்லது சூரியன் (Sun) என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள விண்மீன் ஆகும். இது கிட்டத்தட்ட கோள வடிவில் இருக்கும் சூடான பிளாசுமா ஆகும். இதன் உட்புற வெப்பச்சலன இயக்கமானது இயக்கவியல் செயல்முறை மூலம் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றல் மூலமாகக் கதிரவன் விளங்கி வருகிறது.
கதிரவன் எட்டு அறியப்பட்ட கோள்களைக் கொண்டுள்ளது. இதில் நான்கு புவியொத்த கோள்கள் (புதன், வெள்ளி, புவி, மற்றும் செவ்வாய்), இரண்டு வாயு அரக்கர்கள் (வியாழன் மற்றும் சனி) மற்றும் இரண்டு பனி அரக்கர்கள் (யுரேனசு மற்றும் நெப்டியூன்) ஆகியவை அடங்கும். மேலும் கதிரவ அமைப்பில் குறைந்தது ஐந்து குறுங்கோள்கள், ஒரு சிறுகோள் பட்டை, எண்ணற்ற வால்வெள்ளிகள், மற்றும் நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் இருக்கும் பெரிய அளவிலான பனிப் பொருட்கள் ஆகியவை உள்ளன.
No comments:
Post a Comment