இங்குள்ள சிவபெருமான் நான்கு திக்கிலும் #நான்கு_வள்ளல்களாக அருள்பாலிக்கிறார் என்பது வரலாறு.
வடக்கே வள்ளலார் கோவிலில் #கைகாட்டும்_வள்ளல்.
கிழக்கே விளநகரில்
தெற்கே பெருஞ்சேரியில்
மேற்கே மூவலூரில்
ஒவ்வொரு திருத்தலத்தின் பெருமையும் முன்பே எடுத்தியம்பி இருக்கிறேன். அத்துணை வள்ளல்களும் முழுக்கு அன்று காவிரிக்கரையில் ஒருசேர அருள்பாலிப்பர். கண்கொள்ளாக் காட்சி, தேவலோக சிறப்பு, மெய் சிலிர்க்கும், மனம் நெகிழும், தியானம் என்று அறியாதவர்கள் கூட தியான நிலைக்குச் செல்வர். சிலருக்கு ஞானம் பிறக்கும். பலருக்கு மகிழ்ச்சி துளிர்க்கும்.
ஐப்பசி முழுக்கு தினத்தில் மனதால் உணர்ந்து, மெய்சிலிர்த்து. இறையருளும் குருவருளும் கிடைக்கப் பெற்றவர்கள். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இன்றளவும் வருகை தருகின்றனர் என்பது உண்மை.
தாங்களும் வர விரும்பினால் வரும் வருடம் ஐப்பசி திருநாளில் காவிரி கரையோரத்தில் தேவலோக காட்சியினைகான(தேவலோகம் என்பது பூமியில் இருக்கக்கூடிய ஒன்றுதான்) முன்பே திட்டமிடுவீர். சரியாக வந்து சேர்வீர். வாழ்க, வளர்க .
No comments:
Post a Comment