Saturday, November 27, 2021

ஊடகங்கள் இப்போ மழைக்கு சூடாக பஜ்ஜி போண்டா சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது.

 பட்டணம்தான் போற மச்சான்...

கொஞ்சம் பார்த்து நீங்க போங்க மச்சான்....
சேத்துப்பட்டு தெருவெல்லாம்
சேறா இருக்குதாம்!
விருகம்பாக்கம் வீதிக்கெல்லாம்
கெரகம் பிடிக்குதாம்...
தியாகராயர் ஏரியா
ஏரியாகவே ஆய்டுச்சாம்...
வடபழனி வீட்டுக்குள்ளே
வெள்ளத் தண்ணி பூந்துக்கிச்சாம்...
பழவந்தாங்கல் பேரு இப்போ
மழைவந்தாங்கலா மாறிடுச்சாம்..
சென்னை நகரம் உருமாறி
செம்பரம்பாக்கமாம்...
தாம்பரமெல்லாம் என்னாச்சுன்னு
தகவல் தெரியலே!...
ஏரி இருந்த நிலத்திலேல்லாம்
வீடு கட்டினால்
இப்படி தண்ணி வந்து
ரொப்பும்ன்னு எவனும்
சொல்லலே!....
கூவம் ஆற்றில்
நல்லத் தண்ணி
பொங்கி ஓடுதாம்....
நல்லத் தண்ணி கொழாவிலே
நாத்தத் தண்ணியாம்!
அடையாறு படகெல்லாம்
இப்போ அம்பத்தூரிலாம்....
என்ன ஆட்சி வந்தாலுமே
ஒண்ணும் பண்ணலே....
ஓட்டை வாய் ஊடகங்கள்
இப்போ 'உம்' ன்னு இருக்கு....
சென்னைக்குக் கண்டம்
எப்பவுமே தண்ணியினாலே!....
பாங்க் லோனு கிடைக்குமான்னு
பாருங்க ராசா!
படகு விட்டு சென்னையிலே
பொழச்சிக்கலாம் ராசா!
- த(க)ண்ணீர் கவிதைகள்!
May be an image of 1 person, car, body of water and road

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...