*நின்றுகொண்டு சாப்பிடுதல் மலச் சிக்கலை உண்டாகும்,
*பேசிக்கொண்டே சாப்பிடுதல் எளிதில் ஜீரணமாகிவிடும் மீண்டும் பசிக்கும்,
*உணவை பகிர்ந்துண்டு சாப்பிடுவது மன நிம்மதியை கொடுக்கிறது.
*அசைவ உணவை சூடாக சாப்பிடுவது நல்லது.
*அசைவ உணவை மறுநாள் வைத்து சாப்பிடுதல் வேண்டாம்,
*சாப்பாடு மேஜையில் அமர்ந்து சாப்பிடுவதை விட தரையில் அமர்ந்து சாப்பிடுவதே சிறந்தது.
*சூடான உணவை அவசர அவசரமாக சாப்பிடக் கூடாது.
*குளிர்காலத்தில் குளிர்ந்த உணவை சாப்பிடக் கூடாது.
*வெயில் காலத்தில் அதிக குளிர்ந்த உணவை சாப்பிடக் கூடாது.
*வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
*உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் வயிற்றில் அரை பங்கு உணவு, கால் பங்கு தண்ணீர் என்று, மீதம் கால் பங்கு வயிற்றை வெற்றிடமாக வைக்க வேண்டும்,
*சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிப்பது நல்லது.
*சாப்பிட்டு முடிந்தவுடன் தண்ணீர் குடிப்பது நோய்,
*சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதே மருந்து.
*கைகளில் அள்ளி உண்ணும்போது இரண்டு இன்ச் (கை ரேகை கோட்டிற்குள்) உள்ள உணவையே சாப்பிட வேண்டும்.
*இவ்வுலகில் போதும் என்று சொல்லும் ஒரே விசயம் சாப்பாடு மட்டும்தான், ஆதலால் அந்த சாப்பாட்டை ரசித்து ருசித்து உண்ண வேண்டும்.
*உணவை குறை கூறாமல் விரும்பிய உணவை அளவோடு உண்ணுங்கள்.
*மனிதன் வாழ்வதற்காக சாப்பிடவில்லை, சாப்பிடுவதற்காகத் தான் வாழ்கிறான்.
No comments:
Post a Comment