Tuesday, November 22, 2022

பாத்ரூம் டைல்ஸ், பிளாஸ்டிக் உப்பு கறை, சிங்க், கிச்சன் டைல்ஸ், ஸ்டவ் போன்றவற்றை நொடியில் சிரமப்படாமல் 10 நிமிடத்தில் சுத்தம் செய்வது எப்படி? இது தெரிஞ்சா இனி கஷ்டப்படவே வேணாமே!

 எல்லோருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய கடினமான பகுதிகள் பாத்ரூம் டைல்ஸ், உப்பு கறை படிந்துள்ள பிளாஸ்டிக் வாலி போன்றவை, கிச்சன் பகுதியில் இருக்கும் சிங்க் மற்றும் எண்ணெய் பிசுக்குள்ள டைல்ஸ் ஆகிய இடங்கள் ஆகும். இந்த இடங்களை சுத்தம் செய்வதற்கு என தனியாக ஒரு நேரம் ஒதுக்க வேண்டி இருக்கும். பெரும்பாலும் இந்த பகுதியை சுத்தம் செய்வதற்கு ரொம்பவே சிரமமாக இருக்கும். ஆனால் இந்த வேலையை 10 நிமிடத்தில் சுலபமாக செய்து முடிக்க கூடிய ஒரு எளிய வீட்டுக் குறிப்பை தான் இந்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இன்று எல்லோருடைய வீட்டிலும் சுத்தமான தண்ணீர் தான் வருகிறது என்று கூற முடியாது. பெரும்பாலும் இருக்கும் இல்லங்களில் உப்புள்ள தண்ணீர், குழாய்களில் வருவதால் தண்ணீர் படும் இடங்கள் எல்லாம் உப்பு கறை படிந்து வருகிறது. குறிப்பாக பாத்ரூம் போன்ற பகுதிகளில் அடிக்கடி தண்ணீர் படுவதால் அந்த இடங்களில் உப்பு கறை படிந்து வெள்ளை வெள்ளையாக தோற்றமளிக்கிறது.  மீண்டும் மீண்டும் அதை சுத்தம் செய்யாமல் விடுவதால் கடினமாக படிந்து அதில் அழுக்குகளும் சேர்ந்து விடுகிறது. இதை சுத்தம் செய்வது ரொம்பவே கடினமாக இருக்கும் என்பதால் அதை யாரும் கண்டு கொள்வதே கிடையாது. இந்த கடினமான பகுதிகளை கூட பத்து நிமிடத்தில் சுத்தம் செய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அதை நாம் எப்படி தயாரிப்பது? என்பதை இனி பார்ப்போம். முதலில் ஒரு பௌலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு டிடர்ஜென்ட் பவுடர் அல்லது விம் லிக்விட் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு இன்ச் அளவிற்கு கோல்கேட் பேஸ்ட் சேர்த்துக் கொள்ளுங்கள். வெள்ளையாக இருக்கும் எந்த பேஸ்ட்டையும் சேர்க்கலாம். பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் ஆப்ப சோடா அல்லது சமையல் சோடா எனப்படும் சோடா உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். இது கிருமிகளை அடியோடு அகற்றும் தன்மை கொண்டுள்ளது. பின்னர் இதனுடன் கொஞ்சம் கல் உப்பும், கடைசியாக எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை தோல் பகுதிகளை சுடு தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரையும் சேர்க்கலாம். பின்னர் இதை அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை நுரை வராமல் கலந்து விட வேண்டும். பின்னர் நன்கு கட்டிகள் இல்லாமல் ஒரு வடிகட்டியால் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு ஸ்ப்ரே பாட்டில் அல்லது ஏதாவது ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை நீங்கள் ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். இந்த தண்ணீரை கொண்டு நீங்கள் பாத்ரூம் டைல்ஸ், சால்ட் கறையுள்ள வாலிகள், மக்குகள், அழுக்கு படிந்துள்ள சிங்க், எண்ணெய் பிசுக்கு உள்ள கிச்சன் மேடை மற்றும் டைல்ஸ், ஸ்டவ் போன்றவற்றைக் கூட ஐந்து நிமிடம் இதை தெளித்து ஊற வைத்து பின்னர் ஸ்கிரப்பரால் தேய்த்து எடுத்தால் போதும், உடனே எல்லா பகுதிகளும் பளிச்சென மின்னும். உங்களுக்கு இனி வேலையும், நேரமும் மிச்சமாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...