Sunday, November 20, 2022

வீடு மாற்றும்போது, நாம் குடியிருந்த பழைய வீட்டில் இந்த 1 பொருளை விட்டு சென்றால் ஐஸ்வர்யம் நம்மோடு வரும். தரித்திரம் நம்மை விட்டு விலகும்.

பிறந்ததிலிருந்தே ஒருவர் ஒரே வீட்டில் இருந்து வளர்ந்து, இறப்பது என்பது இன்றைய கால சூழ்நிலைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. ஆக சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி, குடியிருக்க கூடிய வீட்டை விட்டு இடம்பெயர்ந்து இன்னொரு வீட்டிற்கு குடிபோகும் போது நாம் முறையாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றிய தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். வாடகை வீட்டிலிருந்து இன்னொரு வாடகை வீட்டிற்கு மாறினாலும் இந்த விஷயங்களை பின்பற்றலாம். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறினாலும் இந்த விஷயத்தை பின்பற்றலாம். ஒரு சொந்த வீட்டில் இருந்து இன்னொரு சொந்த வீட்டுக்கு மாறினாலும் இந்த விஷயங்களை பின்பற்றலாம். இருக்கும் வீட்டை விட்டு இடம்பெயர்ந்தால் இதை செய்து பாருங்கள் நிச்சயமாக ஐஸ்வர்ய லட்சுமி உங்களுடனே இருப்பாள். பொதுவாகவே ஒரு வீட்டை காலி செய்துவிட்டு, அடுத்த வீட்டிற்கு செல்லும்போது நாம் குடியிருந்த வீட்டை சுத்தபத்தமாக துடைத்து எடுத்துப் போக கூடாது என்று சொல்லுவார்கள். நம் வீட்டில் இருக்கும் பண்ட பாத்திரங்களை எடுக்கும்போது வீடு கொஞ்சம் அழுக்காகும் பரவாயில்லை. அந்த அழுக்கோடு குடியிருந்த வீட்டை விட்டு செல்ல வேண்டும். சுத்தமாக கூட்டி துடைத்து பெருக்கி நம் குடியிருந்த வீட்டை, வீட்டு ஓனர் கையில் ஒப்படைக்க கூடாது. அடுத்தபடியாக நாம் குடியிருந்த வீட்டில் நாம் பயன்படுத்திய ஏதாவது ஒரு பழைய பொருளை விட்டு செல்ல வேண்டும் என்பதும் ஐதீகம். பழைய துடைப்பம், பாய் இப்படி நீங்கள் பயன்படுத்திய எதாவது ஒரு பொருளை அந்த வீட்டிலேயே விட்டுச் செல்லுங்கள். அதன் பின்பு கொஞ்சமாக மஞ்சள் பொடி. நீங்கள் குடியிருந்த வீட்டில் மூளை முடுக்குகளில் கொஞ்சமாக மஞ்சள் பொடியை தூவி விட்டு செல்ல வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் விட்டுச் சென்ற அந்த வீட்டிற்கு, நீங்கள் காலி செய்துவிட்டு சென்ற அந்த வீட்டிற்கு இன்னொரு குடும்பம் வரும் அல்லவா, அந்த குடும்பமும் சுபிட்சமாக இருக்கும். அந்த வீட்டை விட்டு நீங்கள் வெளியேறுகிறீர்கள் அல்லவா. புது வீட்டிற்கு சென்ற நீங்களும் ஐஸ்வர்யத்தோடு சுபிட்சத்தோடு நல்லபடியாக வாழ்வீர்கள்.மொத்தமாகவே ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து, காலி செய்த வீட்டில் மொத்தமாக நான்கு மூலைகளில் இந்த மஞ்சளை லேசாக தூவி விட்டால் போதும். அவ்வளவுதான். புது வீட்டிற்கு குடி செல்லும்போது வழக்கமாக நாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். நிறைகுடம் தண்ணீர், கல் உப்பு, துவரம் பருப்பு வெல்லம் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் போன்ற மங்களகரமான பொருட்களை முதலில் எடுத்துச் செல்ல வேண்டும். பூஜை அறையில் சுவாமி படத்தை வைத்து குறிப்பாக பிள்ளையார் லட்சுமி சரஸ்வதி மூன்று பேரும் ஒன்றாக இருக்கக்கூடிய சுவாமியின் படத்தை வைத்து பூஜை செய்து நாம் கொண்டு சென்ற பொருட்களை எல்லாம் சுவாமிக்கு முன்பு வைத்து புதுசாக பசும்பால் காய்ச்சி பொங்க விட்டு அந்த பாலையும் நெய்வேதியமாக வைத்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பூஜைக்கு வைத்த பொருட்களை அன்றைய தினம் புது வீட்டில் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் குறிப்பாக அந்த உப்பு அந்த துவரம் பருப்பை வைத்து சாம்பார் வைக்க வேண்டும் நிறைய காய்கறிகளையும் சேர்த்து சாம்பார். பால் காய்ச்சிய புது வீட்டில் கட்டாயமாக வீட்டில் இருப்பவர்கள் அன்றைய நாள் இரவு தங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சில பேர் பால் காய்ச்சி விடுவார்கள். கிரகப்பிரவேசம் செய்து விடுவார்கள். அன்றைய இரவு அந்த வீட்டில் தங்குவதற்கு வசதி இல்லை என்று அவர்கள் குடியிருந்த பழைய வீட்டிற்கு செல்வார்கள். அப்படி செய்யக்கூடாது. பால் காய்ச்சிய பின்பு கிரகப்பிரவேசம் செய்த பின்பு அந்த நாள், அன்று இரவு மட்டுமாவது அந்த புது வீட்டில் தான் தங்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமான விஷயம். மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றினால் நீங்கள் குடி செல்லக்கூடிய புது இல்லம் கோவிலாக மாறும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...