இசைப் பேரரசி எஸ். ஜானகி அம்மா , தான் பாடும் எந்த பாடலையும் பாடும் போது தன் உடல் மொழியை ஒரு துளிக்
கூட வெளிப்படுத்தாமல் வெகு அமைதியாகப் பாடும் ஒரு மகா கலைஞர் !!...
முகத்தில் கூட சிறு கண்ணசைவு, அபிநயம் , நெற்றி அசைவு, புருவ அசைவு, முகச் சுருக்கம் என ஏதுவுமே இல்லாமல் பாடலிற்கான அவ்வளவு உணர்ச்சிகளையும் தன் குரலில் மட்டுமே தெளிவாக வெளிப்படுத்தும் கலைஞர்!!...
சிட்டுக் குருவி படத்தில் அவர் பாடிய அடாட மாமரக் கிளியே உன்ன இங்கு நா
மறக்காலியே ... பாடலை அத்தனை துள்ளலோசையுடன் இசைக்கும் அவரது உடல் அசைவு ஒரு துளிக் கூட வெளிப்படவில்லை. ! வேறு எந்த கலைஞரும் இப்படி பாடவே முடியாது!!...
இதைப் போலவே கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகாவிற்கு அவர் பாடிய பூவரசம்பூ பூத்தாச்சு ... பொண்ணுக்கு சேதி வந்தாச்சு... பாடலில் குரலில் தான் எவ்வளவு துள்ளல் ! உற்சாகம்! குதித்தோடும் நீரோடைப் போல ஒரு கட்டுக்கடங்காத உற்சாகம் !
இந்த பாடல்களை எல்லாம் கண்களை மூடிக் கொண்டு கேட்டு பாருங்கள் ! மனக் கண்ணில் தெரிவது ஒரு இளம் பெண்ணின் உற்சாக துள்ளல்! ஆட்டம் . மகிழ்ச்சி பெருக்கில் அங்கும் இங்கும் ஒடி ஆடும் ஆனந்த குதியாட்டம்!!. இந்த பாடல்களுக்கு அச்சு அசல் ஒரு மான் குட்டியின் துள்ளல் கொண்ட இன்னிசை...
பிறவி கலைஞரின் பிறவி திறமை !!. அற்புதமான திறமை!!...
No comments:
Post a Comment