Tuesday, November 8, 2022

சுருங்கி போன துணிமணிகள் அயர்ன் பண்ண மாதிரி வெறச்சி புதுசு போல இருக்கணுமா? துணி துவைக்கும் பொழுது இந்த 1 பொருள் சேர்த்து துவைங்க துணிகள் சுருங்காது!

துணி துவைக்கும் பொழுது எப்பொழுதும் பாதுகாப்புடனும், அக்கறையுடனும் துவைக்க வேண்டும். மிக நுண்ணிய நூழிலைகளால் ஆன இந்த துணிமணிகள் விரைவாகவே அதன் தன்மையை இழந்து கிழிந்து போவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாஷிங் மெஷின் இல்லை அல்லது கைகளில் அடித்து துவைக்கும் துணிமணிகள் விரைவாக சுருங்குவது ஏன்? இந்த சுருக்கம் இல்லாமல் அயர்ன் பண்ண மாதிரி எப்பொழுதுமே புதுசாக இருக்க என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். துணி துவைக்கும் பொழுது காட்டன் துணிகளை எல்லாம் பழங்காலம் முதல் இன்று வரை கஞ்சி போட்டு துவைப்பதை நாம் பார்த்திருப்போம். இதற்காக சாதம் வடித்த கஞ்சியில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் துணிமணிகளை அலசுவது உண்டு. இவ்வாறு செய்யும் பொழுது காட்டன் துணிமணிகள் நன்கு மொர மொரப்பாக விரைப்பாக இருக்கும். அதே போன்ற ஒருமுறை தான் இதுவும்! இந்த முறையை கையாளும் பொழுது எந்த விதமான துணிமணிகளாக இருந்தாலும் சீக்கிரம் சுருங்காமல் கஞ்சி போட்டது போலவே விரைப்பாக இருக்கும். துணிமணிகளின் ஆரோக்கியத்திற்காகவும், நீண்ட நாள் உழைக்கவும், சுருக்கம் இல்லாமல் புதிது போல உழைக்கவும் செய்ய தேவையான ஒரு பொருள் ‘ஜவ்வரிசி’. இந்த ஜவ்வரிசியை வைத்து தான் இப்பொழுது எளிமையான முறையில் நம்முடைய துணிமணிகளை சுருக்கமில்லாமல் புத்தம் புதிதாக மாற்ற போகிறோம். நாலு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை வெறும் வாணலியில் போட்டு லேசாக சூடு பறக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வறுத்து எடுத்த இந்த ஜவ்வரிசி நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பவுடர் போல நன்கு நைஸ்சாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இந்த ஜவ்வரிசி பவுடரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நீங்கள் ஜவ்வரிசி பவுடரை சேர்க்கும் பொழுது கட்டிகள் தட்டாமல் நன்கு கிண்டி விட வேண்டும். இருப்பினும் ஜவ்வரிசிகள் ஆங்காங்கே கட்டியிருக்கும். பரவாயில்லை தண்ணீர் கொதிக்க கொதிக்க ஜவ்வரிசி கரைந்து விடும்.  நன்கு கரைந்து கஞ்சி போல ஆனதும் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். துணிகளை துவைத்த பிறகு அலசும் முன் இந்த கஞ்சி தண்ணீரில் இருந்து கால் கப் அளவிற்கு நீங்கள் ஒரு நாளைக்கான துணிமணிகளை தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் ஊற வைத்தால் சரியாக இருக்கும். அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக தண்ணீரில் அலசினால் துணிமணிகள் சுருங்கவே சுருங்காது விரைப்பாகவே இருக்கும்.  அது மட்டுமல்லாமல் இந்த ஜவ்வரிசி கஞ்சியுடன், நீர்க்க தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அயர்ன் செய்யும் பொழுது இதை ஸ்ப்ரே செய்து அயர்ன் செய்து பாருங்கள், ரொம்பவே சுலபமாக உங்களுடைய துணிமணிகள் மொர மொரப்பாக மாறும். நீண்ட நாட்கள் நூழிலைகளுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க இந்த ஜவ்வரிசி கஞ்சி ரொம்பவே உபயோகமாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...