Tuesday, November 8, 2022

கணவனின் முன்னேற்றம் தடைபட மனைவியின் இந்த 1 செயலும் காரணம். இந்த தவறை மட்டும் ஒருபோதும் பெண்கள் வீட்டில் செய்யவே செய்யாதீர்கள்.

கணவன், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு காரணமாக இருப்பது மனைவி. அதாவது திருமணத்திற்குப் பின்பு அதே கணவன், தன்னுடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தாலும் அதற்கு காரணமும் அந்த மனைவியாகத் தான் இருக்க முடியும். காரணம் வீட்டில் மனைவி எப்படி இருக்கிறாரோ, அதை பொருத்துதான் அந்த ஆணினுடைய வளர்ச்சி இருக்கும். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், வீட்டில் இருக்கும் மனைவி இந்த ஒரு செயலை செய்வதன் மூலம் கணவனின் வளர்ச்சி பாதிக்கப்படுமா? கணவனின் முன்னேற்றம் தடைபடுமா! என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு விஷயத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை எத்தனை பேர் நம்புவீர்கள் என்று தெரியாது. கணவனின் முன்னேற்றத்திற்கும், வீழ்ச்சிக்கும் பெண்களும் ஒரு காரணம் என்று நம்பும் பெண்கள் மட்டும் இதை பின்பற்றலாம். நம்பாதவர்களுக்கு வழக்கம்போல எதுவுமே கிடையாது. அது உங்களுடைய இஷ்டம். வீட்டில் இருக்கும் பெண்கள் பகலில் தூங்கினால் அது அந்த வீட்டின் ஆணின் வளர்ச்சியில் கட்டாயமாக தடையை ஏற்படுத்தும். அதாவது மனைவி பகல் நேரத்தில் தூங்கினால், அந்த கணவனுடைய முன்னேற்றம் தடைப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. உடனே இரவு நேர வேலை பார்ப்பவர்கள், பகலில் தானே தூங்கவேண்டும். வேறு என்ன செய்வது. என்று விதண்டாவாத கேள்விகளை எழுப்ப வேண்டாம். உடல்நிலை சரியில்லாதவர்கள், குழந்தைகள், இரவு நேரத்தில் நைட் ஷிப்ட் செய்பவர்களுக்காக இது சொல்லப்படவில்லை. பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய நேரத்தில் இரவு தூங்குவதை போல, பகலிலும் அசந்து தூங்கவே கூடாது.  சில பெண்கள் இரவிலும் நன்றாக தூங்குவார்கள். ஓய்வு எடுப்பார்கள். பகலிலும் கும்பகர்ணன் போல எப்ப பாத்தாலும் தூக்கிக் கொண்டு இருப்பார்கள். இது மிக மிக தவறு. சரி, இப்படி சொன்னால் நாங்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதற்கு என்ன ஆதாரம். வரலாற்றுரீதியான ஆதாரமும் உங்களுக்காக இதோ. ராமாயணத்தில் இருந்தே நமக்காக ஒரு உதாரணம் சொல்லப்பட்டுள்ளது. இராமாயணத்தின் புராண கதை எல்லோரும் அறிந்த ஒன்றே. ராமாயணம் நிறைவு பெறும் சமயத்தில், அதாவது இராமபிரான் இந்த பூமியில் அவதாரம் எடுத்த நோக்கம் முடிந்த பின்பு அவர் வைகுண்டம் செல்ல வேண்டிய நேரம் வந்தது. அப்போது எமதர்மராஜாவிற்கு ராமபிரான் அழைப்பு விடுத்து இருப்பார்.  ராமரும், எமதர்மராஜாவும் உரையாடுவதை வேறு யாரும் கேட்டு விடக் கூடாது. அது தேவலோக இரகசியம் அல்லவா? இதற்காக ராமர் தன் அறைக்கு வெளியே காவலாளியாக தன் உயிருக்கும் மேலான, நம்பிக்கை வாய்ந்த லட்சுமணனை காவலுக்காக நிற்க வைத்திருப்பார். அந்த சமயம் பார்த்து ராமரை சந்திப்பதற்கு துர்வாச முனிவர் வந்திருப்பார். துர்வாச முனிவரை, ராமபிரானின் அறைக்குள் விடாமல் லக்ஷ்மண தடுத்துநிறுத்த, துர்வாச முனிவருக்குக் கோபம் வர இந்த சூழ்நிலையில், சர்யூ நதிக்கரையில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை நேர்ந்தது லட்சுமணருக்கு. இது அவர் தன்னுடைய அண்ணனை, அண்ணனின் வாக்கினை எந்த அளவிற்கு மதிப்பார் என்பதை நமக்கு உணர்த்துகின்றது. சரி, இதற்கும் மனைவிமார்கள் தூங்குவதன் மூலம் கணவனுக்கு முன்னேற்றம் தடைபடும் என்பதற்கும் என்ன சம்பந்தம். ராம அவதாரம், கடவுளின் அவதாரம். அந்த கடவுளுக்கே உடன் பிறந்த தம்பியான லக்ஷ்மணனுக்கு எதற்காக துர் மரணம் நேர்ந்தது! ‘ராமனை ஒரு நொடிப்பொழுதும் பிரியாமல் இருக்க கூடிய பாக்கியம் அந்த சீதாதேவிக்கே கிடைக்கவில்லை.’ அந்த பாக்கியம் லட்சுமணனுக்கு கிடைத்துள்ளது. ராமனை ஒரு நொடிப்பொழுதும் பிரியாத லட்சுமணனுக்கு ஏன் இந்த நிலமை! என்று நாம் என்றைக்காவது சிந்தித்து உள்ளோமா? ராமர் வனவாசம் சென்ற பின்பு லட்சுமணர், ராமர் உடன் இருந்த அந்த 14 வருடமும் தூங்க மாட்டேன் என்ற சபதத்தை எடுத்துக்கொண்டார். தன்னுடைய அண்ணனும் அண்ணியும் வனவாசத்தில் இருக்கும் 14 ஆண்டு காலமும் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நித்திரா தேவியை தன்னுடைய கண்களில் இருந்து விலக்கி வைத்து இருந்தார். லட்சுமணனுக்கு, நித்திரா தேவி அவர்கள் 14 ஆண்டுகாலம் தூங்காமல் இருப்பதற்கான வரத்தையும் கொடுத்துள்ளார்கள். இதனால் லட்சுமணனின் மனைவியான ஊர்மிளை தன்னுடைய கணவருக்கும் சேர்த்து இரவு பகல் பாராது மொத்த நேரமும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். லட்சுமணனுக்கு வாழ்க்கையில் துர்மரணம் ஏற்பட, ராமாயணத்தில் லக்ஷ்மணனுக்கு வெற்றி கிடைக்காமல் போனதற்கு, லட்சுமணன் மனைவி ஊர்மிளை செய்த இந்த தவறும் ஒரு காரணம் என்று வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு வரலாற்றின் மீதும், சாஸ்திர சம்பிரதாயத்தின் மீதும் நம்பிக்கை இருந்தால், இந்த பதிவை படிக்கும் பெண்கள் இனி பகல் தூக்கத்தைத் தவிர்த்து விடுங்கள். அதாவது என்றாவது ஒரு நாள் உடல்நிலை சரியில்லை, இரவு கண் முழித்த களைப்பும் உள்ளது, என்ற காரணத்தின் மூலம் பகல் நேரத்தில் தூங்குவது என்பது தவறு கிடையாது. தினம் தினமும் பகல் நேரத்தில் தூங்குவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். அதை தவிர்த்துக் கொண்டால் உங்களுடைய கணவனின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நல்லது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...