Thursday, November 3, 2022

குழாய் மூலம் குடிப்பதற்கு ஏற்ற நீரை 2 சதவீதம் பேர் மட்டுமே பெறுகின்றனர்- ஆய்வில் தகவல் .

 பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் மிகவும் மோசம் என்று 5 சதவீதம் பேரும், மோசம் என்று 15 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 5 சதவீதம் பேர் குடிநீர் இணைப்பு இல்லை என்று கூறியுள்ளளனர். இந்திய தண்ணீர் வாரத்தையொட்டி நடத்தப்பட்ட ஆய்வில் கூறி இருப்பதாவது:- 2 சதவீதம் இந்திய குடும்பங்கள் மட்டுமே தங்கள் நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளில் இருந்து தரமான குடிநீரை பெறுகின்றன. மேலும் 65 சதவீதம் பேர் நவீன வடிகட்டுதல் செயல்முறையை பயன்படுத்துகின்றனர். பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் மிகவும் மோசம் என்று 5 சதவீதம் பேரும், மோசம் என்று 15 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 5 சதவீதம் பேர் குடிநீர் இணைப்பு இல்லை என்று கூறியுள்ளளனர். குடிப்பதற்கும், சமைப்பதற்கும் சுத்தமான குடிநீரை பெற 34 சதவீதம் பேர் நீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பயன்படுத்துகின்றனர். 31 சதவீதம் பேர் ஆர்.ஓ. அமைப்பை பயன்படுத்துகிறார்கள். 14 சதவீதம் பேர் கொதிக்க வைத்து பயன்படுத்துகிறார்கள். 5 சதவீதம் பேர் மண்பானைகளை பயன்படுத்துகிறார்கள். 1 சதவீதம் பேர் குளோரினேஷன், படிகாரம் மற்றும் பிற கனிமங்களை பயன்படுத்துகின்றனர். 7 சதவீதம் குடும்பங்கள் சுத்திகரித்து பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்குவதில்லை. இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...