Thursday, November 3, 2022

கவர்னரை திரும்பபெற கோரி கடிதம்: தி.மு.க.-கூட்டணி எம்.பி.க்கள் அறிவாலயம் சென்று கையெழுத்திட்டனர் .

 கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் அறிவாலயம் சென்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர்.  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சமீபத்தில் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதன் அடுத்த கட்டமாக ஜனாதிபதியிடம் முறையிடவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்காக தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் அனைவரும் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து ஜனாதிபதியிடம் கொடுக்க உள்ள கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...