Sunday, November 20, 2022

கிருஷ்ணா .

 ஆநதிரப் பிரதேசத்தின் குண்டூர் அருகில் (புர்ரி பாலம் (BURRI PALEM) என்ற ஊரில் 1945 மே 31 இல் பிறந்தவர்.

1960 களின் தொடக்கத்தில் திரைப் படத்துறைக்கு வந்தவர்.
என் டி ராமாராவ், நாகேஸ்கவரராவ் போன்றவர் பிரபலமாக இருந்த காலத்தில் இவரும் அவர்கள் இணையாகப் பல படங்களில் நடித்ததன்றி, இயக்கவும் செய்தார். படங்களைத் தயாரித்தார்.
முதல் மனைவி இந்திரா தேவி 2022 இல் தான் இறந்தார்.
இரண்டாம் மனைவி நடிகை விஜய நிர்மலா. அவர் தமிழில் பணமா பாசமா படத்தில் நாகேஷுடன் நடித்தவர். பிரபல பாடலினால் பெயர் பெற்றவர் வாழைத் தண்டு போல உடம்பு அலேக். என்ற பாட்டால் அலேக் நிர்மலா என்றே அழைககப் பட்டவர். அவர் கடந்த 2019 இல் இறந்து விட்டார்.
மகன்கள் மற்றும் ஒருமகள் உள்ளனர்.
விஜய நிர்மலா பல படங்களை இயக்கி உள்ளார். நடிகர் கிருஷ்ணாவும் படங்களை நடித்தும் இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.
பத்மாலயா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வாயிலாகப் படங்கள் தயாரித்தார். பத்மாலயா ஸ்டுடியோ மிகப் பெரியதாக அன்றைய நாட்களில் ஹைதராபாதில் நிறுவினார்.
என் டி ஆர நடத்தி வந்த ஸ்டுடியோ மற்றும் நாகேஸ்வரராவ் நடத்திய அன்னபூர்ணா ஸ்டுடியோவிற்கு இணையாக இவர் பத்மாலயா ஸ்டுடியோவை நடத்தினார்.
பிரபல நடிகர்கள் என். டி. ஆ;ர். மற்றும் ஏ என் ஆர. இருவருடனும் போட்டியாகப் பல படங்கள் வெளியிட்டவர்.
"அல்லூரி சீதா ராம ராஜு" என்ற படம் மிகவும் பிரபலமாக ஓடியது- வெள்ளையர்களை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றிய கதை. மாநில அரசின் அவார்டுகளைப் பெற்றது- சென்னையிலு;ம் சிறப்பாக ஓடியது.
இவரது சில படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நடிக்க வாய்ப்பளித்து இயக்கியுள்ளார். அதில் "நிவுரு கப்பின நிப்பு" "பெஜவாடபெப்புலி", "விஸ்வநாத நாயகுடு" என்ற படங்கள் சிவாஜியை நடிக்க வைத்த படங்கள். இவை தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப் பட்டன.
"திரிசூலம்" தமிழில் சிவாஜி நடித்தது அவரின் 200 வது படம். இதனைத் தெலுங்கில் "சங்கர் குரு" என்ற பெயரில் நடித்தவர் கிருஷ்ணா ஆவார்.
மற்றும் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.
தமிழில் ஜெய்சங்கர் நடித்த பல துப்பறியும் படங்களும், முததுராமன் போன்றவர்களின் குடும்ப படங்களும் இவர் தெலுங்கில் நடித்து வெற்றி கண்டவர்.
என் டி ஆர ஜெயலலிதா நடித்த "தேவுடு சேஸின மனுஷுலு" படத்தில் உடன் நடித்தவர்.
"விய்யாலவாரி கையாலு" என்ற படம் ஜெயபிரதாவுடன் நடித்து நல்ல வெற்றி தந்த படமாகும்.
பல நல்ல படங்களைத் தந்தவர் நேற்று 14 - 11 - 2022
உடல் நலக் குறைவால் மரணம் எய்தினார். கலையுலகின் பெரிய இழபபு என்றே கூறலாம்.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...