Sunday, November 20, 2022

வெளிச்சத்திற்கு #கொண்டுவரப்பட #வேண்டிய #வரலாற்றின் #பக்கங்கள்..!🌷

 "ஒட்டு மொத்த வட இந்தியாவையும் எங்கள் ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முடிந்தது..

ஆனால் தெற்கை எங்கள் ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முடியவில்லை..
அதற்கு காரணம் #சோழர்கள்..! என்று சொன்னவர் மாமன்னர் அசோகர்.
ஆற்காட்டில் உள்ள ஜம்பை என்னும் இடத்தில், அசோகர் சோழர்களின் வீரத்தை கல்வெட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
அசோகரின் அப்பா, பிந்து சாரர் முயற்சி செய்தும் தெற்கை கைப்பற்றமுடியவில்லை. பிந்து சாரனின் பிரும்மாண்ட படை எடுப்பை முறியடித்தது, அன்றைய சோழ மன்னர் இளம்சேட்சென்னி.
இளம்சேட் சென்னி யார் தெரியுமா..??
உலகின் முதல் கல்லணையைக் கட்டிய, கரிகால் சோழனது தந்தை தான் இளம்சேட்சென்னி.
பிந்து சாரார் காலத்திற்கு பின், சரியாக 600 ஆண்டுகள் கழித்து, அதே மௌரிய சாம்ராஜ்யத்தை சேர்ந்த சமுத்திர குப்தன், தென்னகம் நோக்கி படை எடுத்து வந்த பொழுது, சமுத்திர குப்தனின் அந்த படையை அன்று முறியடித்தது, அன்றைய பல்லவ சக்கரவர்த்தி விஷ்ணு கோபன்
அதாவது 1700 ஆண்டுகளுக்கு முன்பு.
இன்னமும் நாம், அசோகர் மரத்தை நட்டார், குளத்தை வெட்டினார் என்று தான் படித்து கொண்டிருக்கிறோம்.
அந்த அசோகர், அசோகரின் அப்பன் பிந்து சாரன், இவர்கள் அனைவரையும், மிரட்டிய சோழர்களின் வீரத்தை.!
இந்த மொத்த இந்தியாவும் படிக்கிறதா..?
என்றால் அதான் இல்லை.
இந்தியாவிலேயே மிகப்பெரிய பிரகாரங்கள், பெரிய தெப்ப குளங்களோடு, அதிகம் கோவில்கள் இருப்பது தெற்கில் தான். அசோகரைக் காட்டிலும் அதிக மரங்களை அன்று சேர, சோழ, பாண்டிய, மன்னர்கள் நட்டிருக்கிறார்கள்.
அசோகரைக் காட்டிலும் அதிக குளங்களை, அன்று இந்த மூவேந்தர்கள் வெட்டி இருக்கிறார்கள். அத்தகைய மூவேந்திர்களின் வீரத்தையும், ஈரத்தையும், சொல்லும் வரலாறுகள் தேசிய அளவில் பாட திட்டங்களில் இருக்கின்றனவா..?
என்றால் அதான் இல்லை.
அவ்ளவு ஏன்...?
நம் தமிழ்நாட்டில் அசோகரை, அனைவருக்கும் தெரியம். ஆனால்.. இளம்சேட்சென்னியை பலருக்குத் தெரியாது. சமுத்திர குப்தனை தெரிந்த அளவு கூட, பல்லவ மன்னன் விஷ்ணு கோபனைப் பற்றித் தெரியாது.
இது ஏன்..? எதனால்..? எதற்காக..?
நம் மரத்தமிழர்களது வீரமும், ஈரமும் மிகுந்த வரலாறுகள் யாரால்..? மறைக்கப்படுகிறது..?
புதைக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட நம் வரலாறுகளை எவ்வாறு.? மீட்டெடுப்பது என்பதைப்
பற்றிய எண்ணங்கள் இனியேனும்,உரியவர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும்.
சங்கே முழங்கு..!
சங்கத்தமிழே முழங்கு..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...