Saturday, November 19, 2022

திமுகவா, அதிமுகவா?

 இன்று பாஜக தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்வதற்கு யார் காரணம்?

திமுகவா, அதிமுகவா?
அதிமுகவே தான்.
திமுக, தன் பாட்டுக்கு, தன் கூட்டணிக் கட்சிகளுக்குப் பண உதவி செய்து நட்புறவு பாராட்டி வருகிறது. 2021தேர்தலில் பலமிக்க கூட்டணி அமைத்து தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
ஆனால் அதிமுக என்ன செய்தது?
1. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கப் பிரகாசமான வாய்ப்புகள் இருந்த போதிலும் உட்கட்சிப் பூசலால் அதிமுக வாய்ப்பை கோட்டை விட்டது. கூட்டணி கட்சியான பாஜகவை உதாசீனம் செய்தது. பொதுவெளியில் அவமதித்தது.
2. அடுத்தது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர் செல்வத்தின் பங்கு.
'நான் பாடுபட்டு உழைத்தால் பழனிச்சாமி அல்லவா முதல்வராவார்?' என்று நினைத்துத் தேர்தலில் வெற்றி பெற உழைக்கவில்லை அவர்.
பன்னீர்செல்வம் நினைத்திருந்தால் தென்தமிழகத்தில் அதிமுக இன்னும் அதிக வெற்றிகள் குவித்திருக்க முடியும், திமுக அரியணை ஏறி இருக்காது.
3. திமுக அரசு ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே அரசை எதிர்த்துப் போராட அதிமுகவிற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. திமுகவினரின் அராஜகச் செயல்கள், அமைச்சர்களின் ஊழல்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, பொங்கல் பரிசு அதிர்ச்சி, கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு, பால் பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு என்று எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்த போதும் அதிமுக மௌனம் தான் சாதித்தது.
அதிமுக தினம் தினம் போராடி இருக்க முடியும். அரசை மண்டியிடச் செய்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.
4. எதிர்க்கட்சியாக இருந்த போது, பல விஷயங்களில்
தாங்கள் எடுத்த நிலையை ஆட்சிக்கு வந்த பிறகு திமுக மாற்றியது.
சேலம் எட்டு வழிச் சாலை, ந்யூட்ரினோ திட்டம், மதுக்கடைகள் மூடல், ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள்
என்று பல விஷயங்களில் திமுக முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாட்டை எடுத்திருந்த போதும், அதிமுக அதை மக்களிடம் கொண்டு செல்லவில்லை .
5. வெற்று விளம்பரங்களைத் தேடி அலைகிறார்கள் மந்திரிகளும் முதல்வரும். அதிமுக கண்டிக்கவில்லை.
6. மழை வெள்ளக் கால்வாய்கள் கட்டுமானம் முடிவடையாமல் மக்கள் பெரும் அவதி. அதிமுக இதைப் பற்றிக் கவலைப் படவில்லை.
7. அரசியல் எதிரிகளையும் அரசுக்கு எதிராகப் புகார் அளிப்பவர்களையும் குண்டர்கள் சட்டத்தில் கூசாமல் கைது செய்து சிறையில் தள்ளுகிறது திமுக அரசு. இதைக் கண்டிக்க அதிமுகவிற்கு திராணியில்லை.
ஒரு பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மக்கள் நலனுக்காகப் போராடவில்லை என்றால், மக்களின் பாதுகாப்புக்காகப் போராடவில்லை. எதிர்க்கட்சி என்ற அவர்களது இடம் வெற்றிடமாக மாறியது.
அதிமுக தலைமை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, திமுக கொடுத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நழுவ விட்டார்கள்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் தாங்கள் கொள்ளையடித்த சொத்துக்களைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன?
இந்த வெற்றிடத்தைத் தான் பாஜக இன்று நிரப்பி வருகிறது.
இதில் என்ன தவறு?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...