Sunday, November 20, 2022

அந்த சிலரில் அடியேனும் ஒருவன்....

 ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டதால் ஒரு சங்கியானகிப்போன முன்களப்பணியாளரின் வாக்குமூலம்..

மத்தியமர் அரசியல் குழுவில் சிலர் அநாகரீகமான சொற்களை பயன்படுத்தி பின்னூட்டம் இடுகின்றனர் என சிலர் வருத்தப்பட்டிருந்தார்கள். அப்படி அநாகரீகமான பின்னூட்டங்களை இடுபவர்களில் அடியேனும் ஒருவன் என்பதை நிறைய குற்ற உணர்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முகநூல் தளத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறேன். கண்ணியமாகவும் கவித்துவமாகவும் பதிவுகளை,பின்னூட்டங்களை இட்டு நிறைய நல்ல நண்பர்களை பெற்றிருக்கிறேன். நிறைய மாற்றுக்கருத்து கொண்ட மனிதர்களையும் கடந்து வந்திருக்கிறேன். அவர்களை எப்போதும் எல்லை மீறி வசைபாடியவன் இல்லை. பிடிக்கவில்லை என்றால் பிளாக் செய்து சென்றிருக்கிறேன்.
சரி எங்கே, எப்போது நிகழ்ந்தது மாற்றம்?
மிகச் சரியாக 8 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது அந்த மாற்றம். பொறியியல் துறையில் இருந்து ஆசை ஆசையாய் ஊடகத்துறைக்குள் நுழைந்த பின் நிகழ்ந்தது அந்த மாற்றம். ஊடகத்துறையில் யாரையெல்லாம் ஆகப்பெரிய ஜாம்பாவான்களாக நினைத்திருந்தேனோ, யாரையெல்லாம் ஆகச்சிறந்த அறிவாளிகளாக நினைத்திருந்தேனோ, அத்தனை பேரின் பின்னணியையும் அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டிய நாட்களில் நிகழ்ந்தது அந்த மாற்றம். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே வலுவாக மூளைச்சலவை செய்யப்பட்டு, திராவிட சித்தாந்தத்தின் மீது ஈர்ப்பு கொண்டு பெரியார், சமூகநீதி, சாதி மறுப்பு என பைத்தியக்காரன் போல் சுற்றித் திரிந்தவன். நான் படித்த புத்தகங்கள் அனைத்தும் நான் பார்த்த திரைப்படங்கள் அனைத்தும் நான் கேட்டு ரசித்த பேச்சுகள், சொற்பொழிவுகள் அனைத்தும் ஒரே புள்ளியில் வந்து நின்றன. அது “ஹிந்து வெறுப்பு, ஹிந்தி வெறுப்பு, இந்திய வெறுப்பு”....
ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைத்ததும் சுப.வீ, வீரமணி என பலரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது.
யார் யாரை எல்லாம் அண்ணார்ந்து பார்த்து ஆச்சர்யப்பட்டேனோ, யார் யாரை எல்லாம் ஒருநாளாவது நேரில் சந்தித்து உரையாட முடியாதா என ஏக்கம் கொண்டேனோ, அவர்கள் எல்லாம் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக மோசமான மனிதர்களாக இருந்தனர். அவர்களிடம் அவ்வளவு போலித்தனம். எப்படிப்பட்ட மாயவலையில் சிக்கிக் கொண்டோம் என உணர முடிந்தது. அந்த ஏமாற்றம் தந்த ஆதங்கமும் ஆத்திரமும்தான் அவர்களை யாராவது புகழ்ந்து பேசினாலோ, அவர்களுக்கு ஆதரவாகப் பேசினாலோ கட்டுக்கடங்காத ஆத்திரத்தை உண்டாக்குகிறது.
ஊடகத்துறைக்குள் பல முன்னணி சேனல்களில், பத்திரிக்கைகளில் திராவிட கும்பலின் பட்டறையில் வளர்ந்தவர்கள்தான் வியாபித்துக் கிடக்கிறார்கள். அவர்களின் சிந்தனை முழுவதும் மேற்சொன்ன “ஹிந்து வெறுப்பு, ஹிந்தி வெறுப்பு, இந்திய வெறுப்பு” மட்டுமே நிறைந்து கிடக்கிறது. கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் தங்களது வெறுப்பை உமிழ அவர்கள் தயங்கியதே இல்லை.
குறிப்பாக பிரதமர் மோடி 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அவர்களின் இந்த வெறுப்புப் பிரச்சாரம் தீவிரமடைந்திருக்கிறது.
”இந்தியா நமக்கான தேசமல்ல, நாம் தனித்து இயங்க வேண்டும்” என்ற பிரிவினை சிந்தனை அத்தனை பேரின் செயல்பாடுகளிலும் மையம் கொண்டுள்ளது. அதன் நீட்சிதான் கருணாநிதி காலம் வரை மத்திய அரசு என்றிருந்தது இப்போது ஒன்றிய அரசாக மாறி இருக்கிறது. வளரும் இளம் தலைமுறையிடம் ஆழமாக, மிக ஆழமாக பிரிவினைவாதத்தை விதைக்கிறார்கள்.
புதிதாக இதழியல் முடித்து ஊடகத்துறைக்குள் நுழையும் 20+ பிள்ளைகள் சர்வ சாதாரணமாக பிரதமரை அவன் இவன் என ஒருமையில் வசைபாடுகிறார்கள். கடுகளவும் அவர்களிடம் தேசப்பற்று இல்லை. மாறாக அர்த்தமில்லாத, போலியான ஒரு தமிழ்ப்பற்று இருக்கிறது. எப்போதும் அலுவலகத்துக்கு கருப்புச்சட்டை அணிந்து வரும் என் சக இணை ஆசிரியர் ஒருவர், டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோற்றதும் நான் வருத்தப்பட்டதைப் பார்த்து, “ சார் இந்தியா தோத்தா என்ன, ஜெயிச்சா நமக்கென்ன சார்?, போங்க சார்” என்கிறார்.
மத்திய அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த செய்திகளை எவ்வளவுக்கு எவ்வளவு இருட்டடிப்பு செய்ய முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு இருட்டடிப்பு செய்வார்கள். கட்டாயமாக ஒளிபரப்ப வேண்டிய சில செய்திகளை வேண்டா வெறுப்பாக சிறிய செய்திகளாக எடுப்பார்கள்.
இவர்களைச் சொல்லி குற்றமில்லை. சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எழுதிக் கொடுத்த உரையில் ஜெய்ஹிந்த் என்ற சொல்லை தவிர்த்து, அதற்காக புளகாங்கிதம் அடைந்த கூட்டத்தின் பட்டறையில் இருந்து வந்தவர்கள்தான் இன்று ஊடகத்துறையில் 90% நிரம்பிக் கிடக்கின்றனர். இப்படி அரசியல் களத்தில், ஊடகத்துறையில், வளரும் தலைமுறையை கட்டமைக்கும் கல்வித்துறையில் என எங்கும் பிரிவினை, பிரிவினை, பிரிவினை சிந்தனைதான்.
சுற்றிலும் இப்படிப்பட்ட மனிதர்களையே பார்த்து, அவர்களுடன் புழங்கி வருவதால் ஏற்படும் மன உளைச்சல் மோசமானது.
அதன் விளைவுதான் என்னிடமிருந்து வரும் வசைச் சொற்கள். ( கவனிக்க:- ஆபாசச் சொற்கள் அல்ல). நான் கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று பார்ப்பதில்லை. தேசத்தைப் பழிப்பவன், நான் வணங்கும் தெய்வத்தைப் பழிப்பவன், பிரிவினை விதைப்பவன் என இவர்களை எல்லாம் பொதுவான குற்றவாளிகளாக மட்டுமே பார்க்கிறேன்.
திருடன், கொலைகாரன், சிறார் வன்புணர்வு செய்பவனுக்கு எல்லாம் மரியாதை கொடுக்க மனம் வருமா நமக்கு? அவர்களை விட கீழ்த்தரமானவர்கள் இவர்கள். எனவே இவர்களுக்கும் என்னால் மரியாதை கொடுக்க முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...