*அதிர்ஷ்டம்*
விடிந்தும் விடியாத நேரம்
யாரும் கண்ணில் தென்படவில்லை
பையில் இரண்டாயிரம் ரூபாய்
நோட்டுக்களாக நூறு கட்டுகள்.
இரண்டு கோடி ரூபாய் பண்டல்,,!
வேக வேகமாக வீட்டுக்கு வந்தவள்
வீட்டுக்காரருக்கே தெரியாமல்
பைக் பெட்டியில்
பையை வைத்துப் பூட்டி
சாவியைப் பத்திரப் படுத்தினேன்,,,!
இரண்டு நாட்கள்....
இருபதுமுறை அந்த இடத்தை
போய்ப் பார்த்துவிட்டு வந்தேன்.
யாருமே பையைத்
தேடி வந்ததாய் தெரியவில்லை,,!?
எந்தப் பேப்பரிலும் செய்தியில்லை.
எந்த ஸ்டேசனிலும் புகார் இல்லை.
பெரும் கோடீஸ்வரன் பணம்போல
போனால் போகட்டுமென
விட்டுவிட்டார் என முடிவு செய்து...
அதிஷ்டம் என்பது இதுதானே..?!
என எண்ணி மகிழ்ந்து போனேன்,,!
ஆனாலும் ஒரு சந்தேகம்,,?!
கள்ள நோட்டாய் இருந்து விட்டால்,,?!
மூன்றாவது நாள்
மெல்ல பெட்டியைத் திறந்து
ஒரு கட்டில் இருந்து மட்டும்
இரண்டு நோட்டுக்களை உருவி
பக்கத்து மளிகைக் கடையில்
மளிகை பொருட்கள் வாங்கினேன்...
செல்லுபடி ஆகிவிட்டது..!
சரி இதை கையில் வைத்திருந்தால்
விளம்பரம் ஆகிவிடும் என்பதால்
ஏற்கனவே நினைத்திருந்த
மூன்று வேலைகளை
உடனடியாக செய்து முடித்து விட்டே
வீடு திரும்பினேன்..!
நான் குடியிருக்கும் வீட்டை
ஐம்பது லட்சத்துக்கு விலை பேசி
முழுப்பணத்தையும் கொடுத்து
சாட்சிகளோடு பத்திரம் எழுதினேன்..!
என் சொந்தக்காரரின்
தென்னந்தோப்பு ஒன்றை
ஒருகோடி ரூபாய் கொடுத்து
சுத்தக் கிரையம் செய்துவிட்டேன்..!,
நகரத்தில் பைனான்ஸ் வைத்து
நடத்திவரும் நான்கு நண்பர்களிடம்
ஆளுக்கு பத்து லட்சத்தை
ஒரு ரூபாய் வட்டிக்கு டெபாசீட்
செய்து வைத்தேன்,,!
பக்காவாக
மாதம் நாற்பதாயிரம் ரூபாய்
வருமானத்துக்கும்
வழி செய்து விட்டேன்,,,!
இத்தனைக்கும்
ஒரே பொய்தான் சொன்னேன்.
வெளிநாட்டில் இருக்கிற
என்னோட சித்தப்பா
பினாமியாக என் பெயரில்
முதலீடு செய்கிறார் என்றேன்,,!
மீதி இருக்கிற
ஒன்பது லட்சத்து
தொன்னூற்று ஆறாயிரத்தில்
fit & best கார்மெண்ட்ஸ்ல்
ஷேர் ஹோல்டர் அக்ரீமெண்ட் போட்டாச்சு...
என் மகனுக்கு
எட்டு லட்சத்தில்
ஒரு காரும் வாங்கி வர
இன்று புறப்படுவதாய் உத்தேசம்,,!,
நங்கென்று நடு மண்டையில்
ஒரு கொட்டு விழுந்தது
மணி ஏழரை ஆவுது...
இன்னும் என்னடி தூக்கம் னு
பத்தரகாளியா கத்தி
எழுப்பினா என் அம்மா..?!
அம்மா பக்கத்துல என் ஆத்துக்கார்..
கொஞ்சம் பயந்தபடி,அம்மாவை அழைத்து வந்திருக்கார் போலும்...
இரண்டு பிள்ளைகளும்
கைதட்டி சிரித்துக் கொண்டே
பையி பணம் கோடீன்னு
தூக்கத்தில ஒளருனீங்களே
என்னம்மா ன்னு கேட்டுதுக ..?!
சட்டுனு எழுந்து போயி
பைக் பெட்டியைத் திறந்தேன்...
பொறவுக்க அம்மா
தொடப்பக் கட்டையோடு நின்னா,,!?
பின்ன நைட்டுல பத்துமுறை
பைக் பெட்டியை திறந்து திறந்து
மூடீட்டு வந்து படுத்ததை
பார்த்தவளுக்கு
கோபம் வராதா என்ன..?!
அம்மா பக்கத்து வீட்லயே இருக்கறது எவ்வளவு ஆபத்து என்பதை அப்போது தான் உணர்ந்தேன்....
ஆமாங்க மக்களே...
அதிகாலை கனவு பலிக்கும் னு
சொல்லுவாங்களே...
அது நெஜம்தானுங்களா,,!?
ஒரு
change-ah இருக்கட்டுமே
இனிய காலை வணக்கம்
No comments:
Post a Comment