@@@@######@@@@
இந்த உலகம் நம்முடைய இறந்து
போன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காது.
செய்வார்கள்.
♪நமது ஆடைகளை களைவர்,
♪குளிப்பாட்டுவர்..
♪புதுத்துணி அணிவிப்பர்.
♪நம்முடைய வீட்டை விட்டு
வெளியேற்றுவர்.
♪அடக்கஸ்தலம் என்னும் புதிய
இடத்திற்கு எடுத்து செல்வார்கள்.
♪நம் மரணத்துக்காக கூடும்
கூட்டம்,பெரும்பாலும் நமது
அனுதாபத்திற்காக அல்ல
நம் குடும்பத்தினர்கள் தவறாக
நினைத்துவிடுவார்களோ என்ற
எண்ணத்தினால் என்பதை நினைவு
கொள்வோம்.
♪நாம் உபயோகித்த நமது உடமைகள்..உடைகள்,புத்தகங்கள்
பைகள்,கண்கண்ணாடி,செருப்புகள்
எல்லாம் வெளியேற்றப்படும்.
நம்முடைய பொருட்கள் நம்மை
விட்டு பிரிக்கப்படும் அல்லது
வெளியில் வீசப்படும்.
நம்மை விட்டு நீங்குவது..
நம் உயிர்
நம் அழகு
சொத்துக்கள்
மனைவி/கணவன்
பிள்ளைகள்
இதில் நமக்கென்று எதனை
தயாரித்து வைத்துள்ளோம்..??
உறுதியாக விளங்கி கொள்வோம்..
நமது பிரிவால் இந்த உலகம்
கவலைப்படாது..
நமது உத்யோகத்தின் வேலைக்கு
லேறொருவர் சந்தோசமாக
வருவார்.நம் குடும்பத்தினர் சில
மாதம் கவலைப்படுவார்கள்.
அவ்வளவுதான்,பிறகு நாம்
இருந்தததே மறக்கப்படும்.
மக்களுடன் நமது தொடர்பு
முடிந்துவிட்டது.நமது உண்மையான
வாழ்க்கை இப்போதுதான் ஆரம்பமாகப் போகிறது...
மனிதா..
உன்குடும்ப கௌரவம்,பணம்
பட்டம்,பதவி என்று வாழும்போது
"வாழாமல்"உன்னை நீயே ஏமாற்றிக்
கொள்ளவேண்டாம்.உன் குழந்தைகளுக்கு அத்தியாவசிய
தேவைக்கு மட்டும் சேர்த்து வை..அதிகமாக உழைத்து,உன்
வாழ்க்கையை வாழாமல் இழந்து
விடாதே..
இறுதியில் உன்னுடன் வருவது
நீ செய்த்நற்காரியங்கள்தான்.
இதை மனதில் நினைத்து
ஒவ்வொரு நாளும் செயல்பட்டால்
இந்த உலகத்திலும்,இறந்த பின்னும்
நன்மையடைவாய்.நல்லவனுக்கு
மரணம் முடிவல்ல..கொடியவனுக்கு
மரணம் முடிவாகும்!
இன்று தெருவில்,ஊரில்,
அலுவலகத்தில்,அண்டைவீட்டில்
வயலில் எங்கும் மனித உள்ளங்களில் வாழ்!இதழ்கள் புன்னகை வீசட்டும்.அன்பு கருணை
கண்ணில் ஔிரட்டும்!கைகள்
உதவிட எழும்பட்டும்!
எரிமேட்டில் புகையாக வெளிப்படும்முன்,ஒருபிடி சாம்பலாக மாறும்முன் இல்லை
கல்லறை கூட்டுக்குள் உடல்
அடங்குமுன் அடுத்தவர் உள்ளங்களில் இடம் பிடி.அன்பை
தூவி வாழு!பணத்தை கட்டிக்கொண்டு்அழாதே!
மற்றவர் மனம் நோகும்படி வாழாதே!
வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயம் அல்ல..நடை பழகும் வண்டி..
ஞாபகம் கொள் மனிதா!
No comments:
Post a Comment