இசைஞானியை பற்றி
இரண்டொரு நாட்களாய் எவ்வளவு வசவுகள்...
சாதியவன்மங்கள்!
அதி மேதாவிகள் வசவு பதிவுகள்!
அன்பர்களே!
என் புத்தகத்தை படின்னு சொன்னாரா...இல்ல இந்த கட்சிக்கு ஒட்டு போடுங்கன்னு சொன்னாரா! இல்ல..அவரு சொன்னவுடன் ஒரே நாள்லதான் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு அவர் சொன்னதை செய்ய போறீங்களா?
இல்ல இவரை பின் தொடருங்கள்னு சொன்னாரா?
அட ... அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருக்காரு...
அவரை பாத்து நச... நச... ங்குறீங்க?
இசைஞானி ஒரு இசை மேதை.
அதை நீங்கள் ஒப்புக்கொள்ளணும்ன்ற அவசியமும் இல்லை.தேவையும் இல்லை !
அதை இசை தெரிந்த மேல்நாட்டு இசை ஜாம்பவான்கள் எல்லாம் கொண்டாடுறாங்க!
உங்களுக்கு அவரை பிடிக்கும் என்பதற்காக எல்லாம் உங்களுக்கு பிடிச்ச அரசியல மட்டும்தான் அவர் பேசனும்னு எந்த அவசியமும் இல்ல.
இங்கு அவரவர்க்கு ஒவ்வொரு அபிப்ராயம் உண்டு.
அதை அடுத்தவர் மேல் திணிப்பதுதான் தவறு...
இசைஞானி ஒரு நதியை போல அவர் பாட்டுக்கு ஓடி கொண்டிருக்கிறார்!
மனதிற்கு பிடித்தால் அவர் இசையை ரசிங்க... இல்லையா..தூக்கி போட்டு அடுத்த வேலையை பாருங்க...
நீங்கள் அவருக்கு கொடுக்கும் பதவியோ/ பட்டமோ/மரியாதையோ/வசவுகளோ அவரை எந்த சலனத்திற்கும் உள்ளாக்காது.
ஏன்னா அவர்
அகம்/புறமறிந்த ஞானி!
ஜெய்ஹிந்த்.....
22/11/2022...
No comments:
Post a Comment