பிறந்த வீடா?,
புகுந்த வீடா ?
என்று கேட்டால்,
இரண்டுமே
தனக்குச் சொந்தமில்லை என்றுதான் பெண்களில் பலருக்கும் சொல்லத் தோன்றும்.
.திருமணமாகிவிட்ட பிறகு தாய் வீட்டுக்குச் சென்றால், அதுவும் சகோதரர்களுக்குத் திருமணமான பிறகு சென்றால் போதும்.
அவ்வளவு காலம் நாம் விளையாடிய,
ஆண்டு பழகிய வீட்டில் எதையும் உரிமையோடு எடுத்து ஆள முடியாது.
ஒரு தர்மசங்கடத்துடனே எடுக்க வேண்டி இருக்கும். இல்லையென்றால் உரியவர்களிடம்
(நாம் உரியவர்கள் என்ற பதவியை இழந்துவிடுகிறோம்)
கேட்டு எடுக்க வேண்டி இருக்கும்.
நாம் அங்கே விருந்தாளி மட்டுமே.
அதாவது
சொந்த நாட்டிலேயே அகதிகள்போல.
வாடகை வீடு தேடும் இடங்களில்,
“இந்த வீட்டை வாடகைக்குத் தரும் அதிகாரம் உங்களிடம் இருக்கிறதா?"
” என அந்த வீட்டுக்காரப் பெண்களிடம் கேள்வி, கேட்டால்.
பல
வீடுகளில் , இல்லை என்று தான் பதில் வரும்.
பெண்களின் நிலை என்ன என்பதையும்
போலி அதிகாரம் மட்டும் தான் நமக்கு சொந்தம்
என்ற நிதர்சனத்தையும்
நாம் உணர்ந்து தான் இருக்கிறோம்.
.‘ஏன் நமக்கே நமக்கென்று
ஒரு வீடு இல்லை?’ என்ற கேள்வியின் நாயகிதான்
பெண்
பெண்களுக்கு.
பிறந்த வீடு
தனக்குச் சொந்தமில்லாமல் போகிறது,
சின்ன சின்ன கோபத்தின் போதுகூட ‘
"இது என் வீடு’
எனக் குத்திக் காட்டிப்
பேசக் கூடிய
கணவனால்,
புகுந்த வீடும்
தனக்கு சொந்தமில்லை என்று உணர்ந்து கொள்கிறாள்.
No comments:
Post a Comment