வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறென்ன இருக்கிறது என்றெல்லாம், பலர் வழக்கம் போலவே உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
வாரிசுகள் அரசியலுக்கு வரவேக் கூடாது என்பதல்ல நம்முடைய வாதம். வாரிசுகளின் நோக்கம் என்ன என்பதுதான் முக்கியம். முந்தைய தலைமுறை வாரி சுருட்டிக் குவித்த அதிகாரத்தையும், செல்வங்களையும் மேலும் மேலும் குவிப்பதற்கான வருகையாக இருக்கும்போது, அதை 'விவாதிக்கக் கூட கூடாது' என்பது ஒரு வகையான அரசியல் அட்டூழியமாகும்.
மன்னராட்சியை மறுத்து எதற்கு மக்களாட்சியை முன்னெடுத்தோம். வாரிசுகளின் வழியே குவிக்கப்படும் அதிகாரமும், செல்வாக்கும் மக்களை சுரண்டுவதற்கே வழிவகுக்கும் என்பதால்தான். இதையெல்லாம் மறந்துவிட்டு, மறுத்துவிட்டு இவர்கள் முன்னிறுத்தும் வாரிசுகள் அப்படி என்ன செய்துதான் இவ்விடத்திற்கு வந்தார்கள்? வாரிசு என்கிற வகையைத் தவிர வேறென்னதான் இருக்கிறது இவர்கள் அதிகாரத்தைப் பெறுவதற்குப் பின்னால்?
ராஜாவீட்டு நாய்க்குட்டி என்பதைத் தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு....
ஒரு கோமாளி அரண்மனைக்கு சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை.
அரண்மனை சர்க்கஸ் கூடாரம் ஆகிவிடும்
-துருக்கிய பழமொழி
இது யாருக்கு பொருந்தும் என அனைவருக்கும் புரியும்...
No comments:
Post a Comment