*"பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்", என்பார்கள் !!! இதன் பொருளென்ன?*
*மனிதனுக்கு, பணம் எதை வேண்டுமானாலும் பெற்றுத்தரும் என்கிற குருட்டு நம்பிக்கை அவன் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது !!!*
*வெற்றி லாபம் இன்பம் போன்ற புலனின்ப போதைகளில் மிதந்து கொண்டிருக்கும், ஒவ்வொரு மனிதனும் அதிலிருந்து வெளிவராதவரை அச்சமயங்களில் எல்லாம் அவன் மனம் ஆன்மீகத்தை சிந்திக்கும் எண்ணத்தை இழந்திருக்கும் !!!*
*எனவேதான் "அநேக" இளைஞர்களால் ஆன்மீகத்தில் முழுமனதுடன் இறங்கவோ அல்லது நிலைத்திருக்கவோ முடிவதில்லை !!!*
*"என்னைப் போல இதுவரை யாரும் துன்பத்தை அனுபவித்திருக்க முடியாது" என்கிற இவ்வெண்ணமே நம்மில் பலருக்குமுண்டு !!!*
*தன்னுணர்வை தேடுகின்ற என் அருமை ஆத்மஞான நண்பர்களே நன்றாக கவனியுங்கள் !!!*
*தோல்வி நஷ்டம் துன்பம் இவைகள் தரும் மன வலிகளை தொடர்ச்சியாக அனுபவித்து தாங்க முடியாத பெருந்துயரங்களை அனுபவிக்க நேரிடும் நிலை வருகின்றபோது ...*
*நீ வாழ்வதற்கு வேறு ஒரு கதியே இல்லை என்கிற நிலை வரும்போது ...*
*நீ சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வே இல்லாமல் மிகப்பெரிய சிக்கலில் இருக்கும் போது ...*
*மனோ-சக்தியற்றவனாக உணர்ந்து (அர்ஜுனனைப் போல) பூமியில் வீழ்ந்து விடும்போது ...*
*அதாவது நாம் அந்தப் பிரச்சனையை சந்திப்பதை தவிர வேறு வழியே இல்லை என்கிற இக்கட்டான நிலை வந்துவிடும் போது, ...*
*அதை எதிர் கொள்ள முடியாமல், ஒரு இருட்டுப் பள்ளத்தில் நீ, மயங்கி வீழ்ந்துவிடும் பொழுது ...*
*உன்னை, வழி நடத்திச் செல்ல ஒரு குருவின் துணை உனக்கு கிடைக்கும் !!!*
*அப்போது, நீ முழுமையான கவனத்தோடு, அவ்வழியைப் பின்பற்ற, நேரிடுகிறது அல்லவா?*
*அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஆத்ம ஞானத்தை அறியும் சக்தியை மனிதனுக்குத் தர இறைவன் தேர்ந்தெடுக்கின்றார் !!!*
*ஏனெனில் ஆத்மஞானம் புரிந்து கொள்வது என்பது அவ்வளவு இலகுவானதல்ல !!!*
*எனவேதான், அர்ஜுனனுக்கு பஹவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஞானத்தை தருவதற்கு ஏற்றதொரு இடத்தையும் + நேரத்தையும் அவர் தேர்ந்தெடுத்தார் !!!*
*மானிடா ... உனது வாழ்விலும் இதுவரை அனுபவித்திராத, இதுபோன்ற பெருந்துன்பத்தில் இருக்கும்போது, செய்வதறியாத அந்நிலையில், உனக்கு அஹங்காரம் அடங்கிப் போயிருக்கும் !!!*
*அத்தகைய சூழ்நிலையில் தான், உன்மனம் தளர்ந்து விடாமல், நீ மனதளவில் புத்துணர்வு பெற வேண்டும் !!!*
*எல்லாம் இறைவன் செயல்,*
*நடப்பதெல்லாம் நன்மைக்கே*
*இதுவும் கடந்து போகும்*
*ஒரே திசையில் எப்போதும் காற்று வீசுவதில்லை !!!*
*பயணத்தின் பாதை எப்போதும் மேடாக இருப்பதில்லை !!! ... ...*
*இதுபோன்ற எண்ணங்களில் நம்மனம் நிலைபெற்று இருக்க வேண்டும்.*
*கொடுப்பது துன்பமே ஆயினும் "இறைவா, நீ தருவதாக இருந்தால், அதை விருப்பமுடன் ஏற்கிறேன் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும் !!!*
*அத்தகைய சூழ்நிலையில் தான் இறைவன் உனக்கு ஏதோ ஒரு பெரிய விலைமதிப்பற்ற ஞானத்தைத் தர இருக்கின்றார் என்கிற திடமான ஷ்ரத்தை (நம்பிக்கை) வேண்டும் !!!*
*திடமான ஷ்ரத்தை இருப்பதே ஆத்மஞானம் பெற அடிப்படை !!!*
*எனவே எந்த இடம் ஆத்மஞானம் பெறுவதற்கான குருக்ஷேத்திரம் என்பதும் நமக்கு தெரியாது !!!*
*எந்த துன்பம் அதற்கு அடையாளமான பொருந் துன்பம் என்றும் நமக்கு தெரியாது !!!*
*ஆனாலும் மானிடா எப்போதும் எச்சூழ்நிலையிலும், தயாராயிரு !!! நமக்கு பிடித்தமானவரோ, அல்லது பிடிக்காதவரோ, என, பிறர் ரூபத்தில் பஹவான் ஸ்ரீ கிருஷ்ணர் உனக்கு உபதேசம் செய்ய வர இருக்கின்றார் !!! நிச்சயம் உனக்கு ஆத்ம ஞானத்தைத் தர இருக்கின்றார் !!!*
*கவலைப் படாதே !!! நீ மரணிக்கும் முன் ஆத்ம ஞாணியாகத்தான் இருப்பாய் !!! அதற்காகவே நீ மனித பிறவியில் பிறந்துள்ளாய் என உணர வேண்டும் !!!*
*நற்குணங்களால் மனதை நிரப்பி, உண்மையான பக்தியை வளர்த்து கொண்டு, ஆன்மீகத்தில் மனதை செலுத்தி, பெருந்துன்பத்தையும் ஏற்க மனம் தயாரான நிலையில் காத்திருப்போம் !!! கருணை உள்ளம் கொண்டவர் வந்தருள் புரியட்டும் !!! ஆத்ம ஞானத்தை வழங்கட்டும் !!!*
*உனது வாழ்நாட்கள் அத்தனையும் செலவிட்டு, நீ ஓடி ஓடி சம்பாதித்த கோடி, கோடி காகிதங்களாலும், உறவுகளாலும், சொத்துக்களாலும், ஒரு நாளை கூட, கூடுதலாக திரும்பப் பெற முடியாது !!!*
*அனுதினமும் மரணத்தை நோக்கி தான் நீ நடந்து கொண்டு இருக்கிறாய் என்றும், + உனது அந்த மரணமே உன்னை விரட்டிக் கொண்டிருக்கிறது என்றும், உண்மையிலேயே நீ உணருவதாக இருந்தால், ஒரு நான்கு மணி நேரத்தை ஒதுக்கி, முழுவேகத்தில் இந்நேரம் ஞானயோகப் பயிற்சி எடுத்திருப்பாய் !!!
*இந்த ஞானங்கள் அத்தனையும் எனக்கும் தெரியுமே என்று, ஒருவேளை நீயும் சொல்லலாம் !!! என்ன பயன் அத்தனை ஞானங்களும் உன் மனதில் நினைக்கவில்லையே !!! அவை நிலைத்து இருந்தால், இந்நேரம் கவலைகள் யாவும், தவிடுபொடியாகி இருக்குமே !!!*
*வேதங்கள் குறிப்பிடும், உன் மனதிற்கான இந்தப் பயிற்சியே ... பகவத் கீதை வரும் கூறும் ஆத்மஞானம் !!!*
*கோடிகள் கொடுத்தாலும் கிடைப்பதற்கரிய ஞானங்கள் அத்தனையும் வேதங்களில் கொட்டிக் கிடக்கின்றன !!! அவற்றை சேகரித்து ஞானயோகப் பயிற்சி கொடுக்கின்றேன்.*
*தன்னுணர்வுத் தேடலில் உள்ள நண்பர்களே !!! உன் மனம் ஆத்ம ஞானத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை மனதில் நிலை நிறுத்த வேண்டும். அப்போதுதான் உன் மனம் செல்லுகின்ற பாதை சரியான பாதையாகும். அப்போதுதான் உன் மனம் உனக்கு உண்மையான நண்பன் ஆவான்.*
*பல்லாயிரம் பேர்களில் ஒருவருக்கு தான் இதுபோன்ற தன்னுணர்வை தூண்டுகின்ற பதிவுகள் ஈர்க்கும் !!! அந்த ஈர்ப்பு சக்தி உன்னிடம் உள்ளதா? ஆம் !!! அந்த தேடல் உங்களிடம் உள்ளதால் தான் என்பதிவுகள் உங்களைக் கவர்ந்துள்ளன !!! பிடித்திருக்கின்றன.*
*அத்தகையோர், 4 மணி நேரத்தில் தொலைபேசி மூலம் ஆத்ம ஞானத்தை பெற்றிடலாம் !!! கவலையற்று வாழ்ந்திடலாம் !!! ஜீவன் முக்தி அடைந்திடலாம் !!! பிறவி பயன் பெற்றிடலாம் !!! பிறவா வரம் கிடைத்திடலாம் !!!
*அதற்காகவே, மனித உருவில் இந்த பூமிக்கு நீ பிறந்து வந்திருக்கிறாய் என்பதை மறவாதே !!!*
No comments:
Post a Comment