பகுத்தறிவு என்பது
இயற்கையாகவே அமைந்த எல்லோருக்குமான ஒர்
பொதுவான அறிவு,,
சுயமரியாதை என்பது
எல்லா மனிதனுக்குமான
தன்மான உணர்வு,,,,
இதில் பகுத்தறிவுக்கொர் தந்தை என்பது
எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை,
பெரியார் வரும் முன்பே
வாழ்ந்தவர்களெல்லாம்
பகுத்தறிவில்லாமலும், சுயமரிமரியாதையில்லாமலுமா வாழ்ந்தார்கள்,,,?
இப்ப இருக்கிறதை விட
அந்தகால அதிகமான
சுயமரியாதை உள்ள
கட்டபொம்மனை போன்ற குறுநில
மன்னர்களால்தான் ஆங்கிலேயனை எதிர்க்க முடிந்தது,,,
நம் மண்,நம்முரிமை என்ற சுயமரியாதை கோஷத்தை முழங்கி வெள்ளையனை வெளியேற்ற அடித்தளமிட முடிந்தது,,,
இராஜாம்ராய் மோகன்ராய் காலத்திலிருந்தே பெண் உடன்கட்டை ஏறுதல், பெண் அடிமைத்தனம் போன்ற பெண்ணுக்கு எதிரான அநீதிகளை எதிர்ப்பு தொடங்கி அநீதிகளை அழிக்க முடிந்தது,,,அவருக்கு பகுத்தறிவு இல்லையா,,?
பகுத்தறிவு இல்லாமால அந்தகால தமிழர்களால் இந்த கால விஞ்ஞானம் வியக்கும் வரையிலான ஆச்சரியமான
விசயங்களை கண்டுபிடிக்க முடிந்தது,,
அந்தகால இலக்கியங்களைதான்
இன்னமும் படித்து பெருமை பீத்தி கொண்டிருக்கிறோம்,,,,
வ,உ,சி, சுப்பிரமணிய சிவா, பாரதியார்,
இவுங்கெல்லாம் சுயமரியாதை இல்லாமல்தான் தன் மண்ணுக்காகவும்,தன் மக்களுக்காகவும்
உயிரை தியாகம் செய்தார்கள்,
பகுத்தறிவு
இல்லாமல்தான் திருவள்ளுவர்
திருக்குறளை எழுதினார்,
ஒளவையார் ஆத்திசூடி கொடுத்தார்,,
இராமனுஜம் கணிதத்தை கண்டுபிடித்தார்,,
அன்று வாழ்ந்த பகுத்தறிவாளர்கள்,சுயமரியாதைகாரர்களெல்லாம் மக்களுக்காக தன்னை அர்பணித்தார்கள்,,,
இன்று வாழும் பகுத்தறிவாளர்களெல்லாம்,
தான் வாழ
மக்களை தனக்காக அர்பணித்து கொள்கிறார்கள்,,,
கடவுள், பகுத்தறிவு, சுயமரியாதை, காதல், காமம், நேசம், அன்பு
இவைகள் யாவும் மனிதன் மனிதனாக
வாழ இயற்கையாகவே மனிதனுக்குள்
ஊறி போன ஒர் ஆத்மார்த்தமான உணர்வு,
இதில் எந்த உணர்வுக்கும்
தந்தையென்று எவரும்
இருக்க முடியாது,,,,,
--------------------------------
சாமி கும்பிடுறது பிற்போக்கு தனம் னு சொல்ராங்க. அப்படி பார்த்தால் கழுதை கூட தான் சாமி கும்பிடாது அப்போ அது சிறந்த பகுத்தறிவுவாதியா?
No comments:
Post a Comment