வாரிசு உரிமை இருந்தும் ஒரு மந்திரி பதவியைப பெறத் தவமாயத் தவமிருந்தவருக்குத் தான் தெரியும் காத்திருப்பதின் வலி என்னவென்று.
தான் அனுபவித்த அந்த வலியை, உரிமை உள்ள தனது வாரிசு அனுபவிக்கக் கூடாது என்று தலைமை நினைத்ததில் தவறு என்ன?
எங்களுக்குப் பதவி என்பது தோளில் போட்ட துண்டு மாதிரி, வரும் 2026 (தேர்தல்)க்குப் பிறகு இந்தப் பதவிகளைத் துச்சமெனக் கருதித் தூக்கி எறிவோம்.
சங்கிகளே அளவுக்கு மீறிக் கொட்டமடிக்க வேண்டாம், நாங்களும் சம்பந்தமில்லாமல் அதானி அம்பானி என்று பேச முடியும். தூங்கும் aசிங்கத்தை இடற வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.
நிகழும் மங்கள கரமான சுபக்ருத் வருடம் கார்த்திகை மாதம் 28ம் நாள் புதன்கிழமை ஷஷ்டி திதியும் மக நட்சத்திரமும் கூடிய சுபயோக சுப தினத்தில் (14-12-22) காலை 9-30 மணிக்கு சர்க்காரியா புகழார் பெளத்திரனும் அடியேனது புத்திரனுமானவர்க்கு பட்டாபிஷேகம் செய்வதாக நாங்களே நிச்சயித்து....
உதயநிதி அமைச்சரானால் அவருக்கு ஒதுக்கப்படுமா துறைக்கு யாரை செயலாளராகப்போடுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
இறுதியாக (அந்தத்துரைக்கு)அந்தத்துறைக்கு தற்போது சென்னை மாநகராட்சி கமிஷனராக உள்ள ககன்தீப்சிங் பேடியை நியமிக்க முடிவானதாகக்கூறப்படுகிறது.
சென்ற மாதம் போஸ்டமேன் என்கிறார்கள் இன்று ஆளுநர் அனுமதி கொடுத்த கடிதம் என்று செய்தி வெளியிடுகிறார்கள்.....
உ.பீஸ் வாழ்க்கை மிகவும் கொடியது.......
No comments:
Post a Comment